110 மணி நேரம் முடி வெட்டும் சாதனை முயற்சியில் திண்டுக்கல் இளைஞர்
திண்டுக்கல்:
தொடர்ந்து 110 மணி நேரம் முடி திருத்தம் செய்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்வேடசந்தூரைச் சேர்ந்த ஒரு நாவித இளைஞர்.
ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று துடிப்பவர்கள் இந்த உலகத்தில் ஏராளமாக உள்ளனர்.
குட்டியூண்டு அரிசியில் பிரம்மாண்டமாக ஓவியம் தீட்டி சாதனை புரிந்தவர்கள் உள்ளனர். உடல் முழுவதிலும்பாம்புகளை ஓடவிட்டு சிறிய அறையில் தங்கி சாதனை படைத்தவர்களும் உண்டு.
தமிழகத்திலும் அவ்வப்போது பல இளைஞர்கள் ஏதாவது செய்து சாதனைகளைச் செய்து கொண்டு தான் உள்ளனர்.மேலும் பல இளைஞர்கள் சாதனைத் தாகத்துடன் முயற்சிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு இளைஞர் தான் சங்கர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த நாவித இளைஞரானசங்கர், அம்மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சலூன் கடை ஒன்றை வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று சங்கர் துடித்துக் கொண்டிருந்தார்.
அதன்படி 110 மணி நேரம் தொடர்ந்து முடி திருத்தம் செய்து சாதனை படைக்கத் திட்டமிட்டார். அவருடைய இந்தஆர்வத்தைப் பாராட்டிய அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
கடந்த 18ம் தேதி காலை தன்னுடைய சாதனை முயற்சியைத் தொடங்கிய சங்கர் இன்னும் தொடர்ந்து முடி வெட்டிக்கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து 110 மணி நேரம் முடி வெட்டி சாதனை படைப்பதே தனது லட்சியம் என்கிறார் சங்கர்.
இவரது சாதனைத் தாகத்தை உணர்ந்த திண்டுக்கல் பகுதி மக்கள் ஏராளமான அளவில் சங்கரின் சலூனுக்கு முடிவெட்டிக் கொள்வதற்காக வந்து கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும் 10 நிமிடங்களிலிருந்து கால் மணி நேரத்திற்கு முடி வெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்சங்கர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாகமே முடி வெட்டி வருகிறார் சங்கர் என்பது போனஸ் செய்தி.
நாளை (திங்கள்கிழமை) இரவு அல்லது அதற்கு மறுநாள் காலை தன்னுடைய சாதனையை சங்கர் நிறைவு செய்வார்என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications