இன்னும் 2 மாதங்களில் மதுரை உயர் நீதிமன்ற கிளை தயார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் உயர் நீதிமன்ற கிளை இன்னும் 2 மாதத்தில் செயல்படும் வகையில் பணிகள்முடுக்கி விடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோடா கூறினார்.

மதுரை உலகநேரியில் ரூ.44 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளையின் கட்டுமானப்பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

நீதிபதிகளின் அறைகள், வக்கீல்களின் அறைகள், நீதிமன்ற அறைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றைப்பார்வையிட்ட அவர் கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இந்தத் திட்டத்திற்காக அரசு இதுவரை ரூ.34 கோடியை செலவிட்டுள்ளது. பணிகளை விரைவில் முடிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னும் 2 மாதத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து நீதிமன்றக் கிளை இயங்கத் தயாராகி விடும்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை கிளைசெயல்படத் தொடங்கும் என்றார் முனீர் ஹோடா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+