கர்நாடகத்தில் விரைவில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு
பெங்களூர்:
கர்நாடகத்தில் வரும் 24ம் தேதிக்குப் பின்னர் தமிழ் டி.வி. சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப கேபிள்ஆபரேட்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
காவிரிப் பிரச்சனை காரணமாக கடந்த 5ம் தேதி முதல் கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்கள் மற்றும்தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள் ஆகியவை இருட்டடிப்பு செய்யப்பட்டன.
பல அமைப்புகளைச் சேர்ந்த கன்னட வெறியர்கள் தான் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டி தமிழ் சேனல்களைஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர்.
அதேபோல் தமிழ் திரைப்படங்களைத் திரையிடக் கூடாது என்று கர்நாடகத்தில உள்ள தியேட்டர் அதிபர்களும்மிரட்டப்பட்டனர்.
இவற்றைக் கண்டிக்க வேண்டிய கர்நாடகப் போலீசார் கூட தமிழ் சேனல்களை டி.வியில் ஒளிபரப்பக் கூடாது என்றுஉத்தரவிட்டனர்.
கர்நாடக அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கு வரும் 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தில்விசாரணைக்கு வருவதால் அன்று வரை தமிழ் டி.வி. சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்று நேற்று வரைபெங்களூர் கமிஷனராக இருந்த சங்கிலியானா கேபிள் ஆபரேட்டர்களிடம் மிரட்டும் தொணியில்உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கர்நாடகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இதற்குக் கடும் எதிர்ப்புகளைத்தெரிவித்தன.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஆளுநரிடமும்புகார் கூறப்பட்டது.
தமிழ் திரைப்படங்களை கர்நாடகத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு திமுகதலைவர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் கேபிள் ஆபரேட்டர்களுடன் கர்நாடக செய்தித்துறை அமைச்சரான காகோடு திம்மப்பா பேச்சுநடத்தினார். கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளும் இந்தப் பேச்சில் கலந்து கொண்டனர்.
தமிழ் சேனல்களை இன்றிலிருந்தே ஒளிபரப்பலாம் என்று கேபிள் ஆபரேட்டர்கள் முதலில் முடிவெடுத்தனர்.
தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்ட காரணத்தால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இந்த மாத கட்டண வசூலைக் கூடஇன்னும் தொடங்கவில்லை. எனவே கட்டண வசூலைத் தொடங்குவதற்காகவாவது உடனடியாக தமிழ் டி.வி.சேனல்களை ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தாலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பின்னர் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். வரும் 24ம்தேதிக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்து தமிழ் டி.வி. சேனல்களை ஒளிபரப்புவோம்என்று இன்று மாலை அவர்கள் கூறினர்.
இன்று தமிழ் சேனல்களை ஒளிபரப்பி விட்டு, பின்னர் 24ம் தேதிக்குப் பின்னர் மீண்டும் அவற்றை நிறுத்தும்சூழ்நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம். அதனால் அன்றைக்குப் பின்னரே தமிழ் சேனல்களை ஒளிபரப்புவது குறித்துபார்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறிவிட்டனர்.
இந்நிலையில் தமிழ்ப் படங்களையும் விரைவில் தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரிடம்திரைப்பட வர்த்தக சபையினர் உறுதி அளித்துள்ளனர்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications