கர்நாடகத்தில் விரைவில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழ் சேனல்களை ஒளிபரப்பும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களைக் கடுமையாகத் தாக்குவோம் என்ற கன்னடவெறியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த 5ம் தேதி முதல் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் டி.வி.சேனல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. அதே போலவே கர்நாடக தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள்திரையிடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து கர்நாடகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. கர்நாடகஆளுநரிடமும் புகார் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கேபிள் டி.விக்களில் தமிழ்சேனல்கள் நிறுத்தப்பட்டதற்கும் தன் அரசுக்கும் சம்பந்தமே கிடையாது என்று கூறினார்.

இருந்தாலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தமிழ் சேனல்களை ஒளிபரப்புசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் கிருஷ்ணா தெரிவித்தார். ஆனாலும் ஆளுநர் சதுர்வேதியின்உத்தரவுப்படி தான் கர்நாடக அரசு இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது.

இதையடுத்து இன்று பெங்களூரில் கன்னட அமைப்புகளுடன் கர்நாடக செய்தித்துறை அமைச்சர் காகோடுதிம்மப்பா பேச்சு நடத்த ஏற்பாடு செய்திருந்தார். விதான் சவுதாவில் உள்ள அவருடைய அறையில் இந்தப்பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது.

ஆனால் பேச்சுவார்த்தை துவங்குதற்கு முன்பே கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வெறியர்கள்,அமைச்சரின் அறைக்குள் "தபதப"வென்று நுழைந்து அறை முழுவதும் நின்று கொண்டு தமிழர்களுக்கும் தமிழ்சேனல்களுக்கும் எதிராகக் கோஷம் போட்டனர்.

அவர்களை அமைதிப் படுத்த திம்மப்பா எவ்வளவோ முயற்சி எடுத்தார். ஆனால் அந்தக் கன்னட வெறியர்கள்எதையுமே கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கத்திக் கொண் இருந்தனர்.

தமிழ் சேனல்களை ஒளிபரப்ப அரசு ஏதாவது முயற்சி எடுத்தால் நடப்பதே வேறு என்றும் அவர்கள் மிரட்டஆரம்பித்தனர். தமிழ் டி.வி. சேனல்களை மீண்டும் ஒளிபரப்புவது குறித்தோ, தமிழ் படங்களை மீண்டும்திரையிடுவது குறித்தோ உங்களுக்கு அப்படி என்ன அக்கறை என்றும் அவர்கள் அமைச்சரிடம் பாய்ந்தனர்.

""கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாது என்று நெய்வேலியில் தமிழ் திரையுலகினர் பேரணி நடத்தினார்களே,அவர்கள் முதலில் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மேலும் தமிழகத்திலும் கன்னட டி.வி. சேனல்கள், கன்னடத் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. முதலில் அங்குநிலைமை சரியாகட்டும் பின்னர் நாங்கள் இங்கு தமிழ் சேனல்களை ஒளிபரப்ப அனுமதிப்பது குறித்துயோசிப்போம்"" என்று கோபத்துடன் கன்னட வெறியர்கள் கூறினர்.

இதையும் மீறி கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்களை எந்த கேபிள் ஆபரேட்டராவது ஒளிபரப்பினாலோ அல்லதுதமிழ் படங்களை ஏதாவது தியேட்டர்களில் திரையிட்டாலோ அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம் என்றும் சிலகன்னட வெறியர்கள் நேரடியாகவே மிரட்டினர்.

இப்படி கன்னட வெறியர்கள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கவே அமைச்சரின் அறையில் பெரும் அமளி,துமளி ஏற்பட்டது. இதனால் அதிர்ந்து போன அமைச்சர் அந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தைத் தொடங்கவேஇல்லை. மேலும் பேச்சுவார்த்தையையே அவர் ரத்து செய்து விட்டுப் போய்விட்டார்.

இதற்கிடையே அந்தச் சமயத்தில் பார்த்து ஒரு திரைப்பட இயக்குநர் அமைச்சரின் அறைக்கு வந்துகொண்டிருந்தார். அவருடன் வந்தவரை ஒரு கன்னட வெறியர் கன்னத்தில் அறைந்து விட்டதாக நேரில்பார்த்தவர்கள் கூறினர்.

கர்நாடக அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குவருகிறது. இதையடுத்து ஒருசில நாட்களில் கேபிள் டி.வி. பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கன்னட வெறியர்கள் நேரடியாகவே மிரட்டியுள்ளதைப் பார்த்தால்இந்தப் பிரச்சனை மேலும் பல நாட்களுக்கு நீடிக்கும் போலத் தெரிகிறது.

அதுவரை கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்களும் ஒளிபரப்பாகாது. தமிழ் படங்களையும் அவர்கள்திரையிடமாட்டார்கள் என்றே தெரிகிறது.

தியேட்டர் ஸ்கிரீன் எரிப்பு:

இதற்கிடையே இன்று பெங்களூரில் தமிழ் படம் திரையிட்டதாகக் கருதப்படும் ஒரு தியேட்டரின் ஸ்கிரீனைகன்னட வெறியர்கள் சிலர் எரித்தனர். அந்தப் படத்தின் திரைச் சுருளையும் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

பெங்களூரின் வடக்குப் பகுதியான ஆர்.டி. நகர் பகுதியில் "ஜெயலட்சுமி" டென்ட் தியேட்டர் உள்ளது. கன்னடவெறியர்களின் மிரட்டலையும் மீறி இந்தத் தியேட்டரில் தமிழ் படம் திரையிடப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.

இதைக் கேள்விப்பட்ட 20 கன்னட வெறியர்கள் கொண்ட ஒரு கும்பல் இந்தத் தியேட்டருக்குள் புகுந்தனர்.நுழைந்த வேகத்தில் அங்கிருந்த திரைச் சீலைக்கு அவர்கள் தீ வைத்தனர். இதனால் அது எரிந்து சாம்பலானது.

பின்னர் நேரடியாக ஆபரேட்டர் அறைக்குள் சென்ற அந்தக் கும்பல் அங்கிருந்த ஒரு திரைப்படச் சுருளையும்பறித்துக் கொண்டு அதையும் தீயிட்டுக் கொளுத்தியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் உடனடியாக தியேட்டருக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

சில நாட்களுக்கு முன்னால் தமிழ்ப் படம் ஓடிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் இன்று தெலுங்குப் படம் தான்திரையிட்டிருந்தோம். அந்தக் கும்பலிடம் எவ்வளவோ கூறியும் அவர்கள் அதைக் கேட்காமல் தீவைத்து விட்டனர்என்று "ஜெயலட்சுமி" தியேட்டரின் அதிபர் கூறினார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+