வீரப்பனுக்கு கேசட் கொடுக்க கொளத்தூர் மணிக்கு கர்நாடக நீதிமன்றம் தடை
மைசூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்தியுள்ள வீரப்பனுக்கு கொளத்தூர் மணி கேசட்டோ கடிதமோகொடுத்து அனுப்பக் கூடாது என்று கொள்ளேகால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பெரியார் திராவிட கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணிபெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாகப்பாவை மீட்பதற்கு அவர் தூதராகச் செல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வெடிமருந்துகள் கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக கொள்ளேகால் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி நடராஜ் தூலப்பனவர் தன்னுடைய உத்தரவில் கூறியதாவது:
கொளத்தூர் மணி தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். எனவே அவர் பேசி அனுப்பும் கேசட்டையோ எழுதிஅனுப்பும் கடிதத்தையோ வீரப்பனுக்கு அளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
அவ்வாறு கேசட், கடிதம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பினால் அவ்விவரம் குறித்து முன்னதாகவே கோர்ட்டின்கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
அதேபோல் பத்திரிக்கையாளர்களையும் கொளத்தூர் மணி சந்திக்கக் கூடாது. நாகப்பா கடத்தல் விவகாரம்குறித்தோ, வீரப்பன் குறித்தோ அவர் எதையும் நிருபர்களிடம் தெரிவிக்கவும் கூடாது.
கொளத்தூர் மணியை மைசூர் சிறைக்கு மாற்றும் படி அந்தச் சிறையின் அதிகாரிகள் கோரிக்கை மனுஅளித்துள்ளனர். இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
பின்னர் இவ்வழக்கின் மீதான விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கேசட், கடிதம் அனுப்புவதற்கே தயங்கும் கர்நாடக நீதிமன்றம் கொளத்தூர் மணிக்கு நிச்சயம் ஜாமீன் வழங்கும்என்பதோ, அல்லது அவரை காட்டுக்குள் தூதராக அனுப்ப சம்மதிக்கும் என்பதோ நடக்கும் காரியமாகத்தெரியவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications