அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் தொடங்கியது
சென்னை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டியோ-ஜியோ சார்பில்காலவயைற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்குகிறது.
வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்ட சங்கங்களுடன் பேசாமல், வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லைஎன்று அறிவித்திருந்த தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் மட்டும் பேசி அரசு ஊழியர்களுக்குகூடுதல் அகவிலைப்படியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விட்டார்.
இது பெரும்பான்மையான அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தனது சுய நலத்திற்காகஅரசு ஊழியர்களை, அரசு ஊழியர் ஒன்றியத் தலைவர் சூரியமூர்த்தி அடகு வைத்து விட்டதாகவும் அவர்கள்கடுமையாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் அரசு அறிவித்துள்ள அகவிலைப் படி விகிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியஜாக்டியோ-ஜியோ அமைப்பினர் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடங்கும் என்று அறிவித்தனர்.
அதன்படி புதன்கிழமை காலை வேலைநறுத்தம் தொடங்கியது. பெரும்பான்மையான அரசு ஊழியர்கள்ஜாக்டியோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.
தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று காலையிலேயே அரசுஊழியர்கள் கூடி அரசுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
முக்கிய அலுவலகங்களான சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகம், டி.எம்.எஸ்.வளாக அலுவலகங்கள், வணிக வரி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.
இருப்பினும் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாததால் அங்கு வழக்கமான பணிகள்நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி ஆசிரியர்களும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications