தேவர் குருபூஜையில் ஜெ. பங்கேற்பு?
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர்ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஆகிய இரண்டும் குருபூஜை தினமாகஅக்டோபர் 30ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை தேவர் சமுதாயத்தினர் மிகப் பெரும் விழாவாக கொண்டாடுவார்கள். கமுதி அருகே உள்ள தேவர்சமாதி உள்ள பசும்பொன் கிராமத்தில் அன்றைய தினம் தேவர் சமுதாயத்தினர் கூடி, பொங்கல் வைத்து, மொட்டைபோட்டு தேவருக்கு பூஜை செய்வார்கள். கிட்டத்தட்ட கோவில் விழா போலவே இது நடைபெறும்.
குருபூஜை தினத்தன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் சமாதிக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்துவார்கள்.
இந்த ஆண்டும் தேவர் குருபூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
வழக்கம்போலவே பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில ஜெயலலிதாவும் தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு தேவருக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்என்ற கூறப்படுகிறது.
இதையடுத்த பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டுவரக் கூடாது என்று குருபூஜைக்காக வருவோருக்குஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications