மதமாற்ற தடுப்பு சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை ஆதரித்து சென்னையில் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவுசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு பொது மருத்துவமனைக்கு அருகே உள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் முன்பு இந்த ஆர்ப்பாட்டம்நடந்தது. சட்டசபை பா.ஜ.க தலைவர் லட்சுமணன், எம்.எல்.ஏவான ராஜா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் ராஜா பேசுகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மூடுவது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம்கூறியும் கூட அவற்றை அடைத்து விட்டு கிறிஸ்தவர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருப்பது போலக் காட்டிக் கொள்ளகிறிஸ்தவர்கள் முயலுகிறார்கள்.
ஆனால் இந்தச் சட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தைநாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றார் ராஜா.
முன்னதாக சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வரும்போது செய்தியாளர்களிடம் ராஜாபேசுகையில்,
இப்போது நமது நாட்டில் வெளிநாட்டு கலாச்சாரம் படையெடுத்து வருகிறது. நமது பண்பாட்டின் மீதுவெளிநாட்டினரின் பண்பாடு யுத்தம் தொடுத்துள்ளது.
எனவே இதைத் தடுக்க கண்டிப்பாக இதுபோன்ற சட்டம் தேவை. கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் அவசியமானஒரு சட்டம் தான்.
0அனைத்து மதங்களும் ஒன்று என்று கூறும்போது மதமாற்றம் செய்வது ஏன் என்றார் ராஜா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications