"எஸ்மா" பயத்தால் பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்
சென்னை:
போனஸ், அகவிலைப் படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மேற்கொண்டுள்ளகாலவலையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 2வது நாளாக நீடித்தது.
ஆனாலும் இன்று கணிசமான அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பியிருந்தனர். தமிழகம் முழுவதிலும் சுமார் 70சதவீதம் அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வந்திருந்தனர்.
அதேபோல் சத்துணவு மையங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்பிவிட்டனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், தேனி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிமாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் 100 சதவீத வருகைப் பதிவு இருந்தது.
நீலகிரி, திருவண்ணாமலை மற்றும் கரூர் மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவிலான அரசு ஊழியர்கள்வந்திருந்தனர். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளிலும் 25 சதவீத ஆசிரியர்களே வந்திருந்தனர்.
"எஸ்மா" பயம்:
அரசு ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாலும் "எஸ்மா" சட்டம்அளிக்கும் பயத்தினாலும் பல ஊழியர்கள் பணிக்குத் திரும்பி கொண்டிருக்கின்றனர்.
எத்தனை அரசு ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளார்கள் என்ற பட்டியலை அனுப்புமாறு உயர் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
"எஸ்மா" எனப்படும் அத்தியாவசியப் பணிப் பராமரிப்புச் சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பணிக்குவராதவர்களுக்கு சம்பளப் பிடித்தம் மற்றும் கைது நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் போராட்டத்தில் முதல் நாளான நேற்றே பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான இடங்களில் ஸ்டிரைக்செய்தவர்கள் பணிக்குத் திரும்பி விட்டனர். இன்றும் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்தில் ஆஜராகிவிட்டனர்.
ஸ்டிரைக் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாகஎச்சரித்துள்ளதால் இந்த ஸ்டிரைக்கின் "சுதி" குறைந்து கொண்டே போகிறது.
பல அலுவலங்களில் "எஸ்மா" சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறித்தும், அதன் மூலம் என்னென்ன நடவடிக்கைகள்எல்லாம் எடுக்கப்படும் என்பது குறித்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications