பெங்களூர்-மைசூர் இடையே ரயில்கள் ரத்து
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர்-மைசூர் இடையே ரயில்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைசூர் மற்றும் மண்டியா மாவட்டங்களில் கடந்த மாதம் விவசாயிகள் போராட்டத்தின் போது பல ரயில்கள்தாக்கப்பட்டன.
குறிப்பாக தமிழகத்திலிருந்து வரும் ரயில்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. சில ரயில் என்ஜின்களுக்குத் தீயும்வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெங்களூர்-மைசூர் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் கடந்த வாரம்தான் இந்தப் பாதையில் ரயில்கள் மீண்டும் ஓடத் தொடங்கின.
இந்நிலையில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து மைசூர் மற்றும் மண்டியா மாவட்டங்களில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்றுதெரிகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர்-மைசூர் இடையே ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்கதென்னக ரயில்வே முடிவி செய்தது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்திலிருந்து மைசூர் நோக்கிச் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்துமே பெங்களூருடன்நிறுத்தப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சதாப்தி எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி விரைவு ரயில் ஆகியவைபெங்களூருடன் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்தே மீண்டும் திரும்பிச் செல்லும் என்று தென்னக ரயில்வேஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-->
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications