அரசு ஊழியர் போராட்டம்: சட்டசபையில் திமுக தீர்மானம் நிராகரிப்பு
சென்னை:
அரசு ஊழியர், ஆசிரியர் வேலை நிறுத்தம் தொடர்பாக திமுக உறுப்பினர் துரைமுருகன் கொண்டு வந்தஒத்திவைப்புத் தீர்மானம் சட்டசபையில் நிராகரிக்கப்பட்டது.
சபையின் கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து, அரசு ஊழியர் ஸ்டிரைக்கால் தமிழகஅரசு நிர்வாகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. எந்தப் பணிகளும் நடக்கவில்லை.
ஆசிரியர்கள் ஸ்டிரைக்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.எனவே, இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரநிதிகள்என்னுடன் பேச முன்வந்துள்ளனர். அந்தப் பேச்சு வார்த்தையின்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றுநம்புகிறேன்.
எனவே அந்தப் பேச்சுவார்த்தை நடந்த பின்னர் இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவது நல்லது. அப்போதுதான் என்னால் முழு விவரங்களை அவையில் தர முடியும் என்றார்.
இதைத் தொடர்ந்து துரைமுருகனின் தீர்மானம் இப்போதைக்கு நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் தலைவர்காளிமுத்து அறிவித்தார்.
கொட்டும் மழையில் போராட்டம்:
இதற்கிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று 3-வது நாளைஎட்டியது.
நிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் முன் வைத்துபோராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் சென்னையில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் சென்னை எழிலகம் முன் கொட்டும் கன மழையிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். எத்தனை முறை எஸ்மாவைப் போட்டாலும் கலங்காமல் தொடர்ந்து வேலைநிறுத்தம்செய்வோம் என்று அரசு ஊழியர்கள் உறுதியாக கூறினார்கள்.
இந்தப் போராட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளிகள் தான்.
முகால்வாசி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல, சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள்பணிக்கு வரவில்லை.


Click it and Unblock the Notifications
