கர்நாடகத்தில் கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் பாத யாத்திரை நடத்தி தங்களை அரசியல்ரீதியில் ஓரம் கட்டிய கிருஷ்ணாவுக்கு எதிராக அம் மாநில எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன.
காவிரிப் பிரச்சனையில் முதலில் ஒவ்வொரு விஷயத்திலும் அனைத்துக் கட்சிகளைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து வந்தகிருஷ்ணா திடீரென பாத யாத்திரையை நடத்தினார். இதனால் அவருக்கு அரசியல் ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் கிடைத்தது.
தனது நிலையையும் பலமாக்கிக் கொண்டார். இதனால் அதுவரை கிருஷ்ணாவை ஆதரித்து வந்த பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தன.
இப்போது கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் அனைத்து எதிர்க் கட்சிகளும்கிருஷ்ணாவுக்கு எதிராக அணி திரண்டுள்ளன.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் பசவராஜ் சேடம் கூறுகையில்,
அரசியல் பாதயாத்திரை நடத்தி காவிரி விவகாரத்தையே முழு அரசியலாக்கிய கிருஷ்ணாவை தனிப்படுத்த வேண்டும் என்றார்.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சிந்தியா கூறுகையில்,
காவிரி ஆணையத்தை அணுகாமல் தனது அமைச்சரவையிலேயே அனைத்து முடிவுகளையும் எடுத்து கர்நாடகத்தின் நலனைகிருஷ்ணா கெடுத்துவிட்டார் என்றார்.
மதசார்பற்ற ஜனதா தளதத்தின் தலைவர் நாராயணசாமி கூறுகையில்,
நாங்கள் இந்த அரசுக்குத் தந்த ஆதரவை எல்லாம் பாத யாத்திரை மூலம் கொச்சைப்படுத்திய கிருஷ்ணாவை ஒழித்துக் கட்டவேண்டும் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications