சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் மறியல்: போலீசார் தடியடி
சேலம்:
சேலம் அருகே குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட 500 சாலைப் பணியாளர்கள் மீது போலீசார் தடியடிநடத்தி, பின்னர் அவர்களை கைதும் செய்தனர்.
தமிழகம் முழுவதும் சாலைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம்நடத்துகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டிலிருந்து சுமார் 500 சாலைப் பணியாளர்கள் சென்னை சென்று போராட்டம் நடத்த முடிவுசெய்தனர். சாலைப் பணியாளர்களின் குடும்பத்தினரும் அதில் அடக்கம்.
அதன்படி பஸ்களில் வந்து கொண்டிருந்த போது சேலத்தை அடுத்த உடையார்பாளையம் அருகே அவர்களைப்போலீசார் மறித்தனர்.
இதையடுத்து அங்கேயே நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு சாலைப் பணியாளர்கள் மறியல் போராட்டம்நடத்தினர்.
அவர்களைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
தடியடி நடத்தியதோடு நில்லாமல் சாலைப் பணியாளர்களை போலீசார் ஒட்டுமொத்தமாகக் கைது செய்தனர்.அவர்கள் அனைவரும் சேலத்தில் உள்ள நேரு கலையரங்கில் சிறை வைக்கப்பட்டனர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை பேரணிக்கு அனுமதி மறுப்பு:
இதற்கிடையே சென்னையில் கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற 800க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சாலைப் பணியாளர்கள் 10,000 பேரும் தங்கள் குடும்பத்தினருடன் கோட்டைநோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இதற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமான சாலைப் பணியாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். இவர்களில்சேலம் அருகே 500 பேர் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், சுமார் 800 பேர் மட்டும் சென்னையில் குழுமினர்.
கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அரசு அலுவலக வளாகமான எழிலகம் முன்பு கூடிய அவர்கள் அங்கிருந்துகோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் 5 பேர் கொண்ட குழு ஒன்று மட்டும் முதல்வர்ஜெயலலிதாவைப் பார்த்து மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications