காவிரி: பதில் சொல்ல பா.ஜ.க. தலைவர் மறுப்பு
சென்னை:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு கர்நாடக அரசை மத்திய பா.ஜ.க. அரசு ஏன் வலியுறுத்தவில்லை என்றகேள்விக்கு பதிலளிக்க பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு மறுத்தார்.
இந்தக் கேள்விக்கு, தேசிய நதிகளை இணைப்பது தான் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி என்று பதில் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர் இந்தக் கேள்விக்கு அளித்த பதில்,
இமாலத்தில் உருவாகும் நதிகளால் தொடர்ந்து வட இந்தியாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இந்த நதிகளை தென்னிந்தியநதிகளுடன் இணைப்பது தொடர்பாக தேசிய விவாதம் நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என்றார்.
தொடர்ந்து பிற கேள்விக்கு பதிலளித்த அவர்,
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மத மாற்றத் தடை சட்டம் போல பிற மாநில அரசுகளும் கொண்டு வர வேண்டும். மத மாற்றத்துக்குஏராளமான வெளிநாட்டுப் பணம் செலவிடப்படுகிறது. கட்டாய மத மாற்றத்தால் சமூக அமைதி கெடுகிறது.
இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் கூடத் தான் ஓட்டை உள்ளது. அதற்காக அந்தச்சட்டத்தையே கைவிட முடியுமா? அது போலத் தான் இந்தச் சட்டமும்.
இந்த மத மாற்றச் சட்ட விஷயத்தில் காங்கிரஸ் நாடகமாடுகிறது. இந்தச் சட்டத்துக்கு தமிழக எதிர்க் கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்று தெரியவில்லை என்றார் நாயுடு.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications