இளம் பெண் கடத்தலை மறைத்த 2 காக்கி சட்டைகள் சஸ்பெண்ட்
தூத்துக்குடி:
பெங்களூரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதுதொடர்பான வழக்கை சரியாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் பெங்களூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், சாராதாம்பாள் என்ற பெண்மணியால்மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். மதுரையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அந்தப் பெண் கூட்டி வரப்பட்டார்.ஆனால் மதுரையில் விபச்சாரத்தில் தள்ளப்பட்டார் அந்த அப்பாவிப் பெண்.
மதுரையில் மட்டுமல்லாது, தூத்துக்குடிக்கும் அந்தபெண் அழைத்துச் செல்லப்பட்டு விபச்சாரம் செய்யகட்டாயப்படுத்தப்பட்டார். ஜூலை 14ம் தேதி தூத்துக்குடி போலீஸாரால் விபச்சாரத் தடுப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டார் அப்பெண். தூத்துக்குடி சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலையீட்டால் அந்தப் பெண் அப்பாவி என்று தெரியவந்தது. அவரை கடத்திவைத்து விபச்சாரத்தில் தள்ளியதும் தெரிய வந்தது.
இது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. டி.எஸ்.பி. ராஜரத்தினம் இந்த விசாரணையைநடத்தினார்.
அப்போது முதலில் இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அபுபக்கர் குஞ்சுமற்றும் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி ஆகியோர் வழக்கை சரியாக விசாரிக்காதது தெரியவந்தது.
இந்த இருவரும் விபச்சார கோஷ்டிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அந்தப் பெண் கடத்தி வரப்பட்டவள் என்றஉண்மையை மறைத்துள்ளனர்.
இதையடுத்து இந்த இருவரையும் சஸ்பெண்ட் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அரசுக்கு பரிந்துரைத்தனர். அதைஏற்றுக் கொண்ட டி.ஐ.ஜி. சஞ்சீவ் குமார், இரு அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications