எம்.எல்.ஏவுக்கு லஞ்சம்: குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தமாகா எம்.எல்.ஏவுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலைசெய்யப்பட்டு விட்டனர்.
பாண்டிச்சேரியில் முன்பு ஆர்.வி.ஜானகிராமன் ஆட்சியில் இருந்தபோது, கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்ததமாகா எம்.எல்.ஏ. கந்தசாமி கட்சி மாறுவதற்காக அவருக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கந்தசாமியேபகிரங்கமாக புகார் கொடுத்தார். லஞ்சப் பணத்தையும் போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், இப்போதைய சபாநாயகர்எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், அதிமுக செயலாளர் நடராஜன் உள்ளிட்ட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்குத் தாடர்ந்தது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நீதிபதி அக்பர் அலி தனது தீர்ப்பில், வாதி தனதுசாட்சியத்தின்போது முன்னுக்குப் பின் முரணாக சாட்சியம் அளித்துள்ளார். எனவே குற்றச்சாட்டுநிரூபிக்கப்படவில்லை. இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்துஉத்தரவிடுகிறேன் என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் ஒருவர் வழக்கு நடக்கும்போதே இறந்து விட்டார்ன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications