மதுரை, கோவை, திருச்சி, நெல்லையிலும் சாப்ட்வேர் பார்க்குகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ளதைப் போல மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய நகரங்களிலும் டைடல்பார்க்குகள் எனப்படும் சாப்ட்வேர் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதனை சட்டசபையில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கோவையில் தகவல் தொழில்நுட்ப வசதிகள், மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கானவாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே கோவையில் உடனடியாக டைடல் பார்க் அமைக்கப்படும்.
அதே போல மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய நிகரங்களிலும் டைடல் பார்க்குகள் அமைக்கப்படும். அதற்கானமுயற்சிகளில் தமிழக அரசு இறங்கியுள்ளோம்.
இதுதவிர அனைத்து மாவட்டங்களிலும் செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப மையங்களை அமைக்கவும்முடிவு செய்துள்ளோம். கோவையில் ஏற்கனவே தரைவழி ஒளிபரப்பு மையம் ஒன்று இயங்கி வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications