வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு ஜெ. தீபாவளி பரிசு
சென்னை:
கடும் வறட்சி மற்றும் கர்நாடகத்தின் புண்ணியத்தால் பட்டினியாலும் வறுமையாலும் வாடி வரும் காவிரி பாசனப் பகுதியைச்சேர்ந்த 10 லட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் பரிசு வழங்க தமிழக முதல்வர்ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
இந்த விவசாயிகளுக்கு 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, கால் கிலோ இனிப்பு, 100 கிராம் நெய், காய்கறிகள், பாசிப் பயிறு,மஞ்சள், கடுகு மற்றும் ரூ 50 பணமும் தீபாவளிப் பரிசாக அரசின் சார்பில் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா இன்றுசட்டசபையில் அறிவித்தார்.
இதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் அரசின் சார்பில் ரூ. 210 செலவிடப்படவுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 21 கோடி செலவாகும்.
இதுகுறித்து இன்று சட்டசபையில் ஜெயலலிதா அறிக்கை ஒன்றைத்தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சை, நாகப்பட்டனம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நிலமற்ற ஏழை விவசாக் கூலிகளுக்கும், திருச்சி, கடலூர்,புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பிட்ட சில உட்கோட்டப் பகுதிகளிலும் உள்ளவிவசாயிகளுக்கும் இந்த தீபாவளிப் பரிசு வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேரடி கண்காணிப்பில் நியாய விலைக் கடைகள் மூலமாக இந்த தீபாவளிப்பரிசு வழங்கப்படும். இதனை கிராம அதிகாரிகளம் பஞ்சாயத்துத் தலைவர்களும ஏழை விவசாயிகளுக்குக் கிடைக்கச்செய்வார்கள்.
கர்நாடகத்தின் ஏமாற்றும் புத்தியால் குறுவை சாகுபடி இல்லாமல், சம்பா சாகுபடி குறித்த நம்பிக்கையும் இழந்துவிட்டுவறட்சியிலும், வறுமையிலும் வாடிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகளுக்கு இத் திட்டம் கொஞ்சம் ஆறுதல் தரும் என்றுநம்புகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த விவசாயக் கூலிகள் நண்டுகளையும் நத்தைகள், எலிகளைப் பிடித்து உண்டு உயிரைக் காப்பாற்றி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications