தமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி
ராஜபாளையம்:
வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாகஇதுவரை 7 பேர் உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகவும் பலத்த மழை பெய்து வருகிறது.
திருப்பூர் அருகே உள்ள கருமாரம்பாளையத்தில் தொடர் மழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதனால்அந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கி நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அண்ணாமலை (35), அரசு (25), ராமர் (30) மற்றும் சுதாகர் (17) ஆகிய நான்கு தொழிலாளர்களும் தான்உயிரிழந்தவர்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அண்ணாமலையின் மனைவி சாந்தி (20) மற்றும்அருணாகிரி ஆகிய இரு பெண்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. ராஜபாளையம் பகுதியில் பெய்து வரும் கனமழையால், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் அபாய அளவைத் தாண்டி ஓடியது.இதை அறியாத கிராமத்து மக்கள் சிலர் ஆற்றில் மீன் பிடித்தல், தண்ணீர் பிடித்தல் என்று இறங்கி வெள்ளத்தில்மாட்டிக் காண்டனர்.
அவர்களை தீயணைப்புப் படை வீரர்களும், இளைஞர்களும் கயிறு கட்டி மீட்டனர். இருப்பினும் மீட்கப்பட்டஜெயலட்சுமி என்ற பெண் மூர்ச்சையடைந்து பலியானார்.
அதேபோல் அரியலூர் அருகே தென்னவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (38) என்பவரும்,குருவாலப்பன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (55) என்ற பெண்ணும் இடி தாக்கியதில் சம்பவஇடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மதுரையில் வெள்ளம், மின் தடை:
இந்நிலையில் மதுரையிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சுமார் 11 மணிக்குப் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.
இதையடுத்து மதுரையின் பல பகுதிகளில் மின்சாரம் தடை பட்டது. காலை 8 மணிக்கு மேல் ஓரளவு மழை நின்றபிறகே மின் வாரிய ஊழியர்கள் மின் விநியோகத்தை சீர்படுத்தினர்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலையமும் அதைச் சுற்றியுள்ளபகுதிகளும் கூட வழக்கம் போல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையே திண்டுக்கல்-சிறுமலை மலைப் பாதை, தொடர் மழை காரணமாக சேதமடைந்து போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய ஒரு வாரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications