உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டார் கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், இதைஉடனடியாக ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

தமிழகத்துக்கு தண்ணீர் விடாதது குறித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்புவழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், கிருஷ்ணா மன்னிப்பு கேட்டதாலும் தமிழகத்துக்கு நேற்று இரவில் இருந்து தண்ணீரைத்திறந்துவிட்டதாலும் வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

1ம் தேதி தீர்ப்பு?

தமிழகத்துக்கு கர்நாடகத்திடம் இருந்து எவ்வளவு தண்ணீர் போய்ச் சேர்ந்தது என்பதை 1ம் தேதிக்குள் மத்திய அரசு தெரிவிக்கவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக இன்று காலை கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்றம் உத்தரவிட்டபடி நான்தமிழகத்துக்கு நீர் வழங்காமல் பெரிய தவறு செய்துவிட்டேன். இதற்காக என்னை மன்னிக்க வேண்டும். மேலும் நீங்கள்(நீதிமன்றம்) உத்தரவிட்டபடி நேற்று முதல் தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 10,000 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட்டு வருகிறோம்என்று கூறியிருந்தார்.

ஆனால், கிருஷ்ணாவின் இந்த வாதத்தை ஏற்காத நீதிபதிகள், இந்த மன்னிப்பு மனுவை ஏற்பதா இல்லையா என்பதை 1ம் தேதிமுடிவு செய்வோம். தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் போனது என்பது குறித்து கர்நாடகம் சரியான விளக்கம் தரவில்லை.

மத்திய அரசுக்கு உத்தரவு:

இதனால் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் தண்ணீரின் அளவு குறித்து மத்திய அரசு விசாரித்து எங்களுக்கு 1ம் தேதிக்குள்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது பேசிய கர்நாடக அரசின் வழக்கறிஞர் அனில் தவான், முதல்வர் மன்னிப்பு கேட்டதால் இந்த வழக்கை நீதிமன்றம்தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

ஆனால், அதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். அவர்கள் கூறுகையில், எங்களுக்கும் யாரையும் தண்டிக்க வேண்டும் என்றுஆசையில்லை. ஆனால், கர்நாடக அரசு தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிப்பதிலேயே குறியாய் இருந்தது. உத்தரவை மதிக்கவேஇல்லை. மேலும் சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களுடனும் நீரை பகிர்வதில் கர்நாடகம் சண்டை போட்டு வருகிறது.

சுருட்ட நினைக்கிறது கர்நாடகம்:

ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா என எல்லா அரசுகளுடனும் கர்நாடகம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.உங்களுக்கு பகிர்ந்து வாழும் நோக்கமில்லை. இருப்பதை எல்லாம் சுருட்டிக் கொள்ள நினைக்கிறீர்கள். இது நல்லதல்ல என்றனர்நீதிபதிகள்.

அப்போது இடைமறித்த கர்நாடக வழக்கறிஞர் அனில் தவான், இப்போது 10,000 கன அடி நீரை விட ஆரம்பித்துவிட்டோமே..என்றார்.

தமிழகத்துக்கு ஆறுதல்:

அவரை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்த நீதிபதிகள், உங்களது இந்த பெரிய மனதை தமிழகம் நீரின்றி வறட்சியில்கஷ்டப்பட்டபோது காட்டியிருக்க வேண்டும் என்று கூறி சரியான கொட்டு வைத்தனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், எப்படியோ நீதிமன்ற உத்தரவை ஒரு வழியாய் கர்நாடகம் மதித்தது மகிழ்ச்சி தருகிறது.இதன்மூலம் அரசியல் சட்ட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது என்றனர்.

அப்போது பேசிய தமிழக வழக்கறிஞர் வேணுகோபால், நீரை இன்று தான் கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. இதனால் நீதிமன்றஉத்தரவை கர்நாடகம் முழுமையாக அமலாக்கியதாகக் கருத முடியாது என்றார்.

அவருக்கு பதிலளித்த நீதிபதிகள், நீங்கள் சொல்வது சரிதான். நீரை இப்போது விட்டதால் கர்நாடகத்தின் தவறுகள்சரியாகிவிடாது. இதனால் தான் கர்நாடக முதல்வரின் மன்னிப்பை இன்னும் நாங்கள் ஏற்கவில்லை. நிலைமை எப்படி போகிறதுஎன்று பார்ப்போம். உங்களது (தமிழகம்) விவசாயிகளுக்கும் பாண்டிச்சேரி விவசாயிகளுக்கும் நீர் போய் சேருகிறதா என்றுபார்ப்போம்.

தமிழகத்துக்கு தினமும் எவ்வளவு நீர் போய்ச் சேருகிறது என்பதை மத்திய அரசு கணக்கிட்டுச் சொல்ல வேண்டும். கர்நாடகத்தில்இருந்து மேட்டூர் அணைக்கு எவ்வளவு நீர் வந்து சேருகிறது என்பதை நவம்பர் 1ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அதன்பின்னர் இந்த மன்னிப்பை ஏற்பதா இல்லையா என்று பார்ப்போம் என்றனர்.

இதன்மூலம் கர்நாடகத்துக்குள் உள்ள பிலிகுண்டு அணையைத் தான் நீர் அளவிடும் அணையாகக் கருத வேண்டும் என்றகர்நாடகத்தின் நீண்டநாள் கோரிக்கைக்கும் உச்ச நீதிமன்றம் ஆப்பு வைத்துள்ளது.

கருத்து கூற கிருஷ்ணா மறுப்பு:

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவிக்க கிருஷ்ணா மறுத்துவிட்டார்.

முன்பு நடந்தது...

கிருஷ்ணாவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகத்தை மிகக் கடுமையாகக் கண்டித்தது.

தமிழகத்துக்குத் தண்ணீர் விட்டால் சட்டம்-ஒழுங்கு கெடும் என்று கூறிய கர்நாடக வழக்கறிஞரை இடைமறித்த நீதிபதிகள், இந்தஅரசு பேசாமல் பதவி விலகி வேண்டியது தானே என்று கூறி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

மேலும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் கூறியிருந்தனர். இதில் இன்றுதீர்ப்பு வழங்கப்படும் என்றும் அதற்குள் ஏதாவது செய்து தண்டனையில் இருந்து தப்ப அவகாசம் தருவதாகவும் கூறியிருந்தனர்.

மத்திய அரசுக்கும் நீதிபதிகள் டோஸ் விட்டனர். அரசியல் சட்டம் 256வது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைகர்நாடகம் அமலாக்ககும் வகையில் மத்திய அரசு நெருக்குதல் தராதது ஏன் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

இதனால் இந்த வழக்கில் தனக்கு எதிரான தீர்ப்பு உறுதி என்று தெரிந்து கொண்ட கிருஷ்ணா புத்தி மாறி நேற்று முதல் நீரைதமிழகத்துக்குத் திறந்துவிட்டுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+