வைகோவின் சிறைவாசம் மீண்டும் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீதிமன்றக் காவல் வரும் நவம்பர் 22ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சிறையில் இருந்து இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட வைகோ நீதிபதி ராஜேந்திரன் முன்ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது பேசிய அரசு வழக்கறிஞர், வைகோவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. வைகோ மீதான போலீஸ் விசாரணை முடியும்கட்டத்தில் உள்ளது. இப்போது அவரை விடுவிததால் விசாரணைகள் பாதிக்கப்படும் என்றார்.

இதையடுத்து அவரை அடுத்த மாதம் 22ம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கடந்த ஜூலை 11ம்தேதி வைகோ கைது செய்யப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+