"கருணாநிதி வந்து சந்தித்தால் மகிழ்வேன்": வைகோ
சென்னை:
திமுகவுடன் மதிமுக இணையுமா என்பதை இப்போது சொல்வதற்கில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறினார்.
பூந்தமல்லி பொடா சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட வைகோ பின்னர் வெளியில் வந்தபோது நிருபர்களிடம்கூறுகையில்,
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனை பார்த்து நலம்விசாரிக்குமாறு அவைத் தலைவர் எல். கணேசன் மற்றும் அமைச்சர் கண்ணப்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவர்களும் போய் பார்த்து வந்தார்கள். அப்போது மருத்தவமனையில் கருணாநிதியும் இருந்துள்ளார்.
இதையடுத்து என்னை சந்தித்து நலம் விசாரிக்குமாறு துரைமுருகனிடம் பணித்துள்ளார் கருணாநிதி. அதனால் தான்அவர் என்னை வந்து சந்தித்தார்.
வேலூர் சிறைக்கு வந்து என்னை கருணாநிதி சந்தித்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன். இந்த சந்திப்புகளை வைத்துதிமுகவுடன், மதிமுக இணையுமா என்று கேட்டால், ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. இப்போது இதுகுறித்துஎதுவும் சொல்வதற்கில்லை என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications