சென்னையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ஜெ. அஞ்சலி
சென்னை:
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்றுகாலை மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவரின் 95வது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்குஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டு, தேவர் சிலைக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஆற்காடு வீராசாமி பின்னர் வந்து தேவர் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் வேறு சில கட்சித் தலைவர்களும் தேவர் சிலைக்கு மாலைஅணிவித்தனர்.
இதற்கிடையே முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை பெரும்விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு நடந்த விழாவில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். தேவர் சமாதியிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குருபூஜையையொட்டி தேவர் ஜோதி எடுத்துச் செல்லப்படும் போது நேற்று மானாமதுரை அருகே வன்முறைவெடித்தது. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications