சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அமளி: திமுக கவுன்சிலர்கள் வெளியேற்றம்
சென்னை:
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பாகசென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்துப் போராட்டம்நடத்திய திமுக கவுன்சிலர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
திமுக தலைமை அலுலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்பகுதியை பூங்காவாக நிர்வகிப்பதாகவும், அதற்குப்பதில் பின்னால் உள்ள பகுதியில் கலைஞர் திருமண மண்டபம் கட்டப்படுவதாக முந்தைய திமுக ஆட்சியின்போதுமாநாகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாகவும், ஆனால் அதை மீறி பூங்கா அமைக்காமல் அந்தஇடத்தை அறிவாலயத்துடன் சேர்த்து ஆக்கிரமித்து விட்டதாகவும் அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இதை திமுக மறுத்துள்ளது.
இந்த நிலையில் அண்ணா அறிவாலய ஆக்கிரமிப்பு குறித்து மாநகராட்சிக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தேதியாகராஜன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.
இதைக் கடுமையாக ஆட்சேபித்த திமுக கவுன்சிலர்கள், எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் தவறானதகவல்களைக் கொண்ட வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதைக் கண்டித்தனர்.
அப்போது மாநகராட்சி திமுக தலைவர் சி.வி.மலையன் திடீரென்று வெள்ளை அறிக்கையைக் கிழித்து எறிந்தார்.தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் கோஷம் போட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதனால் அவையில் பெரும்அமளி நிலவியது.
இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு போலீஸாருக்கு துணை மேயர் கராத்தேதியாகராஜன் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து திமுக கவுன்சிலர்களை குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியேபோட்டனர். இதில் சிவாஜி என்ற கவுன்சிலருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications