40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒலித்த மதுரை மீனாட்சி கோவில் மணி
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக ஒலிக்காமல் இருந்த பிரமாண்டமான வெண்கலமணி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட 600 கிலோ எடையுள்ள பிரமாண்டமானவெண்கல மணி மீனாட்சி அம்மன் கோவிலில் நிறுவப்பட்டது. இதற்காகத் தனி மணி மண்டபமும் கட்டப்பட்டது.
பூஜை நேரத்தின்போது இந்த மணி ஒலிக்கும். இதன் ஓசையைக் கேட்ட பிறகு தான் ராமநாதபுரம் ராஜா தனதுபூஜையைத் தொடங்குவார் என்று வரலாறு உண்டு.
இத்தகைய பெருமை படைத்த மணி கடந்த 40 ஆண்டுகளாக ஒலிக்கவில்லை. மணியும், மணி மண்டபமும்பழுதடைந்து கிடந்தன.
இந்த நிலையில் ரூ.1.5 லட்சம் செலவில் இந்த மணிமண்டபமும், மணியும் புதுப்பிக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று மீனாட்சி அம்மன் கோவிலின் வெண்கல மணி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. இனிஅனைத்து பூஜைகளின் போதும் இந்த மணி "கணீர்" என்று ஒலிக்கும்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications