சென்னையை வெளுத்துக் கட்டும் மழை: அல்லல்படும் மக்கள்
சென்னை:
சென்னை நகரின் பல பகுதிகள் மழை நீரில் தீவுகள் போல மிதக்கின்றன.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தினமும் இரவு முழுவதும் மழை பெய்கிறது.காலையில்தான் மழை நிற்கிறது.
இந்த அடை மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.
வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு பல பகுதிகளில்படகுகளையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சாலையின் இரு மருங்கிலும் உள்ள வீடுகள், கடைகளில் நீர் புகுந்து விட்டது.அதே போல லட்சுமி நகர் பகுதியிலும் வீடுகளில் நீர் புகுந்து ஒரு ஆள் மட்டத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
வேளச்சேரியில் தண்ணீர் இந்த அளவுக்கு தேங்கி நிற்பதற்கு, மாடி ரயில் திட்டம் தான் காரணம் என்று மக்கள் புகார்கூறினர்.
ரயில் பாலங்கள் அமைப்பதற்காக மழை நீர் வடிகால் கால்வாய்களை ரயில்வே துறையினர் அடைத்து விட்டதால்ஏற்பட்ட விளைவுதான் மழை நீர் போக வழியில்லாமல் போய் விட்டதாக பொதுமக்கள் கோபத்துடன் கூறினர்.
வேளச்சேரியில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை துணை மேயர் கராத்தே தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்கலைவாணன் ஆகியோர் பார்த்தனர்.
இதேபோல, நுங்கம்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளும் மழை நீரில் மூழ்கியுள்ளது. பெரம்பூரின் பல பகுதிகளும்நீரில் மிதக்கின்றன. ஏற்கனவே மோசமாக இருந்த பல சாலைகள் இப்போது சுத்தமாக பெயர்ந்து போய்காணப்படுகின்றன.
தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம், தொலைபேசிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், கடற்கரை-தாம்பரம் இடையிலான மின்சார ரயில் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டது.
வழக்கம் போல் பல இடங்களில் பாதாளச் சாக்கடைகள் திறந்து கிடந்தன. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் அவசரஅவசரமாக வந்து அவற்றை மூடினர்.
வேறு பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் தட்டுத் தடுமாறி தான் சென்று கொண்டிருக்கின்றனர். முக்கியமாக அலுவலகம்செல்பவர்கள் இதனால் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே வடகிழக்குப் பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடனும் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையமும் தெரிவித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications