ஆசிரியர்கள் போராட்டம்: பள்ளிகளில் பாடம் நடத்தும் வேலையற்ற பட்டதாரிகள்
ராமநாதபுரம்:
அரசு ஊழியர்களுடன் ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பட்டதாரிகள் கை கொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பட்டினம்காத்தான் கிராமத்தில் அந்தக்கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களே பாடம் எடுத்து வருகின்றனர்.
படித்து வேலையில்லாமல் இருந்த அவர்களுக்கு இப்போது பாடம் எடுக்கும் ஆசிரியர் பணி கிடைத்துள்ளதால்உற்சாகமாக செய்து வருகிறார்கள். மாணவர்களும் புது வாத்தியார்களை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு பாடம்கற்கின்றனர்.
கிராமத்து பெரியவர்களும், பெற்றோர்-ஆசிரியர் கழகமும் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.
அதேபோல, ஈரோடு மாவட்டம் பேரோடு கிராம ஒன்றியத் துவக்கப் பள்ளியிலும், பெற்றோர்-ஆசிரியர் கழகஏற்பாட்டின்படி பட்டதாரி பெண்களும், இளைஞர்களும் பாடம் எடுத்து வருகின்றனர்.
இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடிந்து கொள்ளாமல் அருமையாக பாடம் எடுப்பதால் மாணவர்களும் சமர்த்தாகபாடம் கற்றுக் கொள்கின்றனராம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications