இம்மாத இறுதி முதல் கொழும்பு-தூத்துக்குடி கப்பல்
கொழும்பு:
இலங்கையின் கொழும்பிலிருந்து தமிழகத்தின் தூத்துக்குடிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து துவங்கவுள்ளது.இதற்கான கட்டணம் ரூ.6,000ஆக இலங்கை அரசு நிர்ணயித்துள்ளது.
கடந்த 1983ல் இலங்கையில் இன மோதல்கள் தொடங்கியதையடுத்து கொழும்பு-தூத்துக்குடி இடையே கப்பல்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தைகள் தாய்லாந்தில் நடந்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பினருக்கிடையே நிரந்தரப்போர்நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
இதையடுத்து கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க முடிவுசெய்யப்பட்டது. இலங்கை கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இந்திய கப்பல்போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன்படி கொழும்பிலிருந்து இம்மாத இறுதிக்குள் தூத்துக்குடிக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும்என்று இன்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் "கிரீன்வேஸ் டிராவல்வேய்ஸ்" என்ற டிராவல் நிறுவனம் தான் இந்தப் போக்குவரத்தைநடத்தவுள்ளது.
இதன் மூலம் வட-கிழக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்தில் உள்ள தங்களுடைய உறவினர்களை 8மணி நேரம் மட்டுமே பயணம் செய்து இந்தக் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்து விடலாம்.
சுமார் 300 பேர் உட்கார்ந்து பயணம் செய்ய வசதி கொண்ட இந்தக் கப்பலில் ஒருவருக்கான கட்டணம் ரூ.6,000என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வர வேண்டுமானால் ரூ.14,000 செலவாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications