ரஜினிக்கு போட்டியாய் ராமதாஸ்
திண்டிவனம்:
நதிகள் இணைப்புக்கு மக்கள் இயக்கம் தொடங்குவேன் என்று ரஜினி கூறியுள்ள நிலையில், தமிழர்கள் மானத்தைக் காக்க மக்கள்இயக்கத்தைத் தொடங்கப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் தனது தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார். அவரது பேட்டியின முழு விவரம்:
தமிழ்நாட்டில் காமராஜரைப் போல ஒரு தமிழனை முதல் அமைச்சராக்குவது ஆதிக்க சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. மற்ற மொழிக்காரன்தமிழர்களை ஆள வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம். மராட்டியன் ஆண்டால் கூட அதை அந்த ஆதிக்க சக்திகள்வரவேற்பார்கள்.
நடிகரை பலவந்தமாக இழுத்து வந்து அரசியலில் திணித்து தமிழனை ஆள வைக்க அந்த சக்திகள் முயல்கின்றன.
காவிரி நீர் பிரச்சனை என்பது தமிழனின் உரிமைப் பிரச்சனை. இதில் நம்மிடையே ஒற்றுமை இல்லை. ஆனால், கர்நாடகத்தில் எல்லோரும்சேர்ந்து இருக்கிறார்கள். கர்நாடக விவசாயி பாவம் என்று சொல்லும் ஒரு கும்பலும் இங்கு திரிகிறது. கன்னடர்களுக்காக கண்ணீர்வடிப்பவர்களும் இங்கு இருக்கிறார்கள்.
தமிழர்கள் போராடினால் பெங்களூரில் தமிழர்களை அடிக்க மாட்டார்களா என்று பேசி பிரச்சனையையே திசை திருப்புகிறார்கள்.
நீதிமன்றத் தீர்ப்புப்படி தண்ணீரை திறந்துவிட்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்று குதர்க்கமாகப் பேசுகிறார்கள்.அப்படிப்பட்டஆசாமிகள் தான் கங்கை, காவிரி இணைப்புப் பற்றியும் பேசி புதிய அவதாரம் எடுக்க நினைக்கிறார்கள்.
காவிரிப் பிரச்சனையைப் பற்றிப் பேசும்போது, இன்றைய பசியையும், பட்டினியையும் பேசும்போது, கங்கை-காவிரி இணைப்பு என்றுபேசி கர்நாடகத்துக்கு ஆதரவான நிலையை எடுத்துப் பேசுவது தமிழகத்துக்கு நல்லதல்ல.
காவிரி தமிழனின் உரிமை. இதில் வந்து கங்கை- காவிரி, தென்னக நதிகள் இணைப்பு என்று ஒட்டுமொத்தமாக வேறு ஒரு விஷயத்தைக்கொண்டு வந்து இதில் திணிப்பது தேவையில்லாத, தமிழகத்துக்கு எதிரான சதியாகத் தான் கருத வேண்டும்.
சகோதர மனப்பான்மை இல்லாமல் நடந்து கொள்ளும் கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் எவனும் பேசக்கூடாது. முதலில் காவிரியில்நமது உரிமையை நிலைநாட்டுவோம்.
அதைவிட்டுவிட்டு காவிரிப் பிரச்சனைக்கு பெருநதிகள் இணைப்பே தீர்வு என்று கூறுவதும் அதற்காக இயக்கம் நடத்துவதாகக் கூறுவதும்சுத்த ஏமாற்றும் செயல்.
நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது மிகவும் அவசியம் தான். ஆனால், அதைவிட முக்கியம்முதலில் காவிரி உரிமையை நிலைநாட்டுவது தான். இதற்காக மக்கள் இயக்கம் நடத்துவோம். அடுத்த ஆண்டு தொடங்கும் இந்தஇயக்கத்தில் சுயமரியாதை உள்ளவர்கள் வந்து சேரலாம்.
தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றுவது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதில் கட்சிக்கு இடமில்லை. அரசியலுக்கு இடமில்லை.
மதமாற்றத் தடைச் சட்டத்தால் ஊருக்கு ஊர் மக்ளிடையே பிளவு தான் ஏற்படும். இது ஒற்றுமைக்கு எதிரான சட்டம் என்றார் ராமதாஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications