ரஜினியை கிண்டலடிப்பதா?:பன்னீருக்கு இளங்கோவன் கண்டனம்
சென்னை:
நதிகளை இணைக்க மக்கள் இயக்கம் தொடங்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதை விமரிசித்த பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது:
நதி நீர் இணைப்பு தொடர்பாக மக்கள் இயக்கம் தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி அறிவித்துள்ளதுபாராட்டுக்குரியது, அதை காங்கிரஸ் வரவேற்கிறது.
ஆனால், ரஜினியின் அறிவிப்பை கிண்டலடித்து ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை விட்டுள்ளார். அதில் தனது தலைவிஜெயலலிதா, ராஜ்யசபையில் 1982ம் ஆண்டே இதுகுறித்து பேசி விட்டதாக கூறியுள்ளார். ஜெயலலிதாராஜ்யசபையில் பேசியிருக்கலாம், நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் கடந்த 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரையிலும், இப்போது கடந்த 18 மாதங்களாக முதல்வர்பொறுப்பிலும் உள்ள ஜெயலலிதாவும், அவரது அதிமுக ஆட்சியும், இந்த அமைச்சர்களும் நதிகள்இணைப்பிற்காக என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்இளங்கோவன்.












Click it and Unblock the Notifications