தீவிரவாதிகளிடம் தப்பி காஷ்மீர் முதல்வராக முப்தி பொறுப்பேற்பு
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகம்மத் சயீத் (வயது 66) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக அவரது வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாவலப் பலத்தகாயமடைந்தார். ஆனால், சயீத் தப்பிவிட்டார்.
காங்கிரஸ்- மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று பதவியேற்றது. முப்தி முகம்மத் சயீத் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர்கிரிஷ் சந்திர சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மங்கத் ராம் சர்மாபொறுப்பேற்றுக் கொண்டார். இந்த ஆட்சிக்கு சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தந்துள்ளது.
ஸ்ரீநகரில் ஷேர்-ஏ-காஷ்மீர் மாநாட்டு மண்டபத்தில் நடந்த இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கலந்து கொண்டார்.
முதல் மூன்று ஆண்டுகளுக்கு சயீத் முதல்வராக இருப்பார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராகநியமிக்கப்படுவார்.
முன்னதாக பதவியேற்பு விழா நடப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக முப்தி முகம்மத் சயீதின் வீட்டின் மீது தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தினர். ஆனால், அவர் உயிர் தப்பிவிட்டார். ஸ்ரீநகரில் புறநகர் பகுதியான நவ்காமில் உள்ள சயீதின் வீட்டின் மீதுஇன்று காலை 10 மணியளவில் கிரனைட் குண்டுத் தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் இரு குண்டுகளை அவரது வீட்டின் மீதுவீசினர்.
அப்போது முப்தி முகம்மத் சயீத் வீட்டில் இருந்தார். இத் தாக்குதலில் வீட்டின் வெளியே நின்றிருந்த பாதுகாவலருக்கு காயம்ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலையடுத்து பதவியேற்பையொட்டி முப்தியின் வீட்டில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள்அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இத் தாக்குதலுக்கு அல்-நசீரன் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications