இட ஒதுக்கீட்டை மாநிலங்களே நிர்ணயிக்க அதிகாரம் தேவை: ராமதாஸ்
சென்னை:
மக்கள் தொகைக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடுகளை நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின்வாரிசுகளுக்கு இன்ஜினியரிங் மற்றும் மருத்துவப் பட்டப் படிப்பில் இட ஒதுக்கீடு அளிப்பது ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இதனால் இதே போல் வேறு சில குறிப்பிட்ட ஜாதி மக்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படாமல் போகலாம் என்றஅச்சம் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும். அரசியல்வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.
சட்ட ரீதியாக இந்த இட ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பதால், அதற்கு அரசியல் பாதுகாப்பும்கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.
எனவே தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடுகளைநிர்ணயித்துக் கொள்ள அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசன சட்டத் திருத்தம் உடனடியாகக்கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications