ரஜினியின் மக்கள் இயக்கத்திற்கு கிருஷ்ணசாமி ஆதரவு
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் துவக்கவுள்ள மக்கள் இயக்கத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிவரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய உற்பத்தியில் முக்கிய இடுபொருள் தண்ணீர்தான்.ஆனால் நல்ல மழைப் பொழிவுள்ள மலைப் பகுதிகளில் நமது நிலங்கள் இல்லை. பெரும்பரப்பு நிலம் உள்ளபகுதிகளில் நல்ல மழைப் பொழிவு இல்லை.
30 சதவீத பாசன நிலங்கள் மட்டுமே நல்ல மழைப் பொழிவைப் பெற்று வளம் பெறுகின்றன. தமிழகத்தில் பாசனப்பரப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டாலும் அது ஒரு மாயையாகவே உள்ளது.
விவசாயத்தின் மிகப் பெரிய தடுப்பாக இருக்கும் நதி நீர்ப் பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு என்பது இந்திய நதிகள்இணைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
இதற்காக ரூ. 30,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ. 5,000 கோடியாகஇருக்கும். இந்த நதிகள் இணைப்பால் வேளாண்மை செழிக்கும், பஞ்சம் பறக்கும், வறுமை ஒழியும், வேலைவாய்ப்பு பெருகும்.
வறுமை ஒழிப்பு மற்றும் நதி நீர் இணைப்பு குறித்த முயற்சிகளை நடிகர் ரஜினிகாந்த் மக்கள் இயக்கமாகஆக்கவுள்ளது பாராட்டத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
ரஜினி நடத்திய உண்ணாவிரதத்தில் அவருடன் நாள் முழுவதும் மேடையில் இருந்தவர் டாக்டர் கிருஷ்ணசாமிஎன்பது நினைவுகூறத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications