அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்: ஆனால்.. மீண்டும் புதிய குழப்பம்
சென்னை:
கடந்த 10 நாட்களாக நடந்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
போனஸ், அகவிலைப் படி உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23ம் தேதி முதல் அரசுஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர்.
பணிக்கு வராதவர்களுக்கும்ம், பணிக்குச் செல்பவர்களைத் தடுப்பவர்களுக்கும் எதிராக தமிழக அரசு "எஸ்மா"எனப்படும் அத்தியாவசியப் பணிப் பராமரிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கைது மற்றும் சஸ்பெண்ட்நடவடிக்கைகளை மேற்கொண்டது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் அகவிலைப் படியை அதிகரிக்கவே முடியாது என்றும் சட்டசபையில் ஜெயலலிதாஉறுதியாக அறிவித்து விட்டார். மேலும் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்பாத அரசுஊழியர்களை டிஸ்மிஸ் செய்யப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ஜாக்டியோ-ஜியோ நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தலைமைச் செயலகத்தில் பேச்சுநடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜாக்டோ-ஜியோவின் தலைவர் பாலசுப்ரமணியம் பேசுகையில்,
4 சதவீத அகவிலைப் படியை ரொக்கமாகவே தருவதாக முதல்வர் ஒத்துக் கொண்டுள்ளார். முதலில் 3 சதவீதம்மட்டுமே ரொக்கமாக தர முதல்வர் அறிவித்திருந்தார். மீதி ஒரு சதவீதத்தை பி.எப்பில் சேர்ப்பதாகக் கூறியிருந்தார்.இப்போது 4 சதவீதத்தையும் பணமாகவே தர முன் வந்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியும் அல்ல, வெற்றியும் அல்ல. இருப்பினும் எங்களது போராட்டத்தின் உறுதியைப்பார்த்து அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததே எங்களுக்கு முதல் வெற்றி.
பேச்சுவார்த்தையின் இறுதியில் நாங்கள் முழு திருப்தியுடன் இருக்கிறோம் என்று கூற முடியாது.
வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கான ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். ஊழியர்கள் மீது சட்டப்படியானநடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
டிஸ்மிஸ், சஸ்பெண்ட் உத்தரவுகள் உடனடியாக வாபஸ் பெறப்படும். வழக்குகளும் வாபஸ் பெறப்படும். பணிக்குவராத நாட்கள் விடுமுறை நாட்களாக கணக்கில் கொள்ளப்படும் என்றார் அவர்.
போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, தீபாவளி விடுமுறைக்குப் பின் வரும் செவ்வாய்க்கிழமை முதல் அரசுஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் போது, ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாத தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர்சூரியமூர்த்தியும் கலந்து கொண்டார்.
நிபந்தனையின்றி வாபஸ்: அரசு
இதற்கிடையே அரசு ஊழியர்கள் எந்த விதமான நிபந்தனையும் இன்றி தான் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக நிதியமைச்சர்பொன்னையன் கூறியுள்ளார்.
பணிக்கு வராத நாட்கள் விடுமுறை நாட்களாக எடுத்துக் கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள்கூறியுள்ளதை பொன்னையன் மறுத்துள்ளார்.
இது சிறப்பு விடுப்பாகவே கருதப்படும் எனவும், வேலை நிறுத்தம் நடந்த காலத்துக்கு ஊதியம் தரப்படாது எனவும் அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் 4 சதவீத அகவிலைப்படியை அப்படியே ரொக்கமாகத் தருவதாக உறுதிமொழி ஏதும் தரவில்லை. பரிசீலிப்பதாகத் தான்முதல்வர் தெரிவித்தார் எனவும் பொன்னையன் கூறியுள்ளார்.
மீண்டும் ஸ்டிரைக் வருமா?
நேற்று முதல்வர் ஜெயலலிதா தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி அரசு ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ்பெறுவதாக அறிவித்தனர். இப்போது பொன்னையன் மூலமாக அந்த வாக்குறுதிகள் குறித்து முதல்வர் புதிய விளக்கம் தந்துளளார்.
இதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கவும் வாய்ப்புள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications