வீரப்பனை சந்தித்துவிட்டு வந்த ஆதிவாசி பிடிபட்டார்
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மறைந்துள்ள இடமும், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மறைத்துவைக்கப்பட்டுள்ள இடமும் அதிரடிப்படைக்குத் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கன மழை பெய்வதால் உடனடியாக அந்த இடங்களை அதிரடிப்படையினரால் அடைய முடியவில்லைஎன்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்று 2 மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது.
அவரை மீட்பதில் தமிழக அதிரடிபடை தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் கர்நாடக அதிரடிப்படையின் தீவிரம்குறைக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் வீரப்பனைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய ஆதிவாசி ஒருவர் கர்நாடக அதிரடிப்படை வீரர்களிடம்பிடிபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் வீரப்பன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து புதிய தகவலை கூறியுள்ளதாகத்தெரிகிறது.
மேலும் நாகப்பாவை வீரப்பன் எந்தப் பகுதியில் வைத்திருக்கிறான் என்ற விவரமும தெரிய வந்துள்ளதாககூறப்படுகிறது.
இந்தத் தகவல்களை தமிழக அதிரடிப் படையினருடன் கர்நாடகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மறுபடியும் இரு மாநில அதிரடிப்படையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆனால்காட்டுக்குள் கன மழை பெய்து வருவதால் வேகமாக முன்னேறிச் செல்ல முடியவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications