4வது கேசட் அனுப்பினான் வீரப்பன்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பனிடம் இருந்து இன்று இன்னொரு கேசட் வந்துள்ளது.
இந்தக் கேசட் நாகப்பாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கர்நாடக மாநில அதிரடிப்படையினர் தெரிவித்தனர். ஆனால்,அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
நாகப்பாவின் குடும்பத்தினர் இந்த கேசட்டுடன் பெங்களூர் சென்றுள்ளனர். அவர்கள் முதல்வர் கிருஷ்ணாவை நாளை சந்திக்கத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீரப்பனிடம் இருந்து வந்த 4வது கேசட் இது. முதல் மூன்று கேசட்டுகளிலும் தன்னிடம் தூதுவராக கொளத்தூர் மணியை அனுப்ப வேண்டும்என வீரப்பன் கோரியிருந்தான்.
கொளத்தூர் மணிக்கு நேற்று தான் தடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்தால் தான் அவர் காட்டுக்குள்செல்ல முடியும்.
-->












Click it and Unblock the Notifications