தமிழகத்தில் தீபாவளி உற்சாகக் கொண்டாட்டம்
சென்னை:
தீபாவளிப் பண்டிகை தமிழகம் முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பண்டியையொட்டி கோவில்களில் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகள் உடுத்தி ஒருவருக்கொருவர் தீபாவளிவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
மாநிலம் முழுவதும் கடந்த பல மாதங்களாகப் வறட்சி தலைவிரித்தாடிய நிலையில் இந்த தீபாவளி நல்லமழையைக் கொண்டு வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் வியாபாரம் படு மந்தமாகவே இருந்து வந்தது.இடையில் மழை வேறு வந்து விட்டதால் பட்டாசுகள் நமத்துப் போகத் தொடங்கவே, பட்டாசு வியாபாரிகளின்கவலை மேலும் அதிகரித்தது.
ஆனால் நேற்று பட்டாசு விற்பனை மிக ஜோராக நடந்தது. இன்று தமிழகத்தில் மழை பெய்யாததால்இளைஞர்களும், சிறுவர்களும், சிறுமிகளும் மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
அஜித், விஜய், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்களும் ரிலீசாகி இருப்பதால்அவை திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது.
பாதுகாப்பு தீவிரம்:
இதற்கிடையே தீபாவளியை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தமிழகம்முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் நேற்று இரவு தான் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் புகுந்த இரண்டு தீவிரவாதிகளைப் போலீசார் தக்கசமயத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர்.
இதையடுத்து தமிழகத்திலும் போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழகடி.ஜி.பி. நெய்ல்வால் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகப் போலீசார் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை தகாத சம்பவங்கள் குறித்து தகவல்எதுவும் வரவில்லை.
மக்கள் பெருமளவில் கூடும் கடைகளிலும், தியேட்டர்களிலும் சிறப்புப் போலீசார் மாறுவேடங்களில்குவிக்கப்பட்டுள்ளனர் என்றார் நெய்ல்வால்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications