தீபாவளியை சீர்குலைக்க முயன்ற தீவிரவாதிகள் சுட்டு கொலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் முக்கியமான மார்க்கெட்டில் தீபாவளிக்காக பொருள்கள் வாங்க மக்களைக் கொன்று குவிக்க முயன்ற 2 தீவிரவாதிகளைபோலீசார் மிகச் சிசுட்டுக் கொன்றனர். இதனால் பெருமளவில் ஏற்பட இருந்த உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதை ஏற்கனவே உளவுப் பிரிவினர் மூலம் தெரிந்து கொண்ட போலீசார்மார்க்கெட் பகுதியில் மறைந்து நின்று அவர்களைத் தாக்கிக் கொன்றனர்.

அன்சர் பிளாசா என்ற டெல்லியின் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டில் இச் சம்பவம் நடந்தது.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதை அறிந்த போலீசார் சாதாரண உடைகளில் நவீன ஆயுதங்களுடன் அந்த மார்க்கெட்டை சுற்றிநின்று கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே இரு தீவிரவாதிகள் மாருதி காரில் வந்து இறங்கினர்.

மார்க்கெடின் மாடிப் பகுதியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த பகுதிக்குள் அவர்கள் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களைத் தடுத்துநிறுத்தினர்.

அப்போது தங்களிடம் இருந்த துப்பாக்கிளால் அவர்கள் போலீசாரையும் பொது மக்களையும் சுட முயன்றனர். ஆனால், போலீசார் கண்இமைக்கும் நேரத்தில் தீவிரவாதிகளை சுட்டு சல்லடையாக்கினர்.

அவர்களிடம் இருந்து குண்டுகள், துப்பாக்கிகள், டெல்லியின் முக்கிய மார்க்கெட் குறித்த வரைபடங்கள் ஆகியவை சிக்கன. கொல்லப்பட்டஇருவருமே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் அன்சர் பிளாசாவில் தாக்குல் நடத்தியிருந்தால் பெரும் ரத்தக் களறி ஏற்பட்டிருக்கும். தீபாவளிக்காக பொருள்கள் வாங்க வந்தபெண்கள், குழந்தைகள் கூட நூற்றுக்கணக்கில் உயிரிழந்திருப்பார்கள்.

டெல்லி போலீசாரின் துரிதமான செயலால் இத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தையடுத்து தீபாவளியை மக்கள் பயமின்றிக் கொணடாடும் வகையில் டெல்லியில் மிக பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது. மும்பையிலும் மார்க்கெட்டுகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்சர் பிளாசாவை துணைப் பிரதமர் அத்வானி இன்று பார்வையிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+