நியாயம் குறித்து கர்நாடகம் பேசுகிறது!!!
பெங்களூர்:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்டும் முன் தமிழகத்துக்கு முன் கூட்டியே தகவல் தர வேண்டும் என்பது உள்பட ஆணையத்தின்செயல்பாட்டில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், கர்நாடகத்தின் பேச்சுக்கு தலையாட்டும் போக்கை நிறுத்திவிட்டு எல்லோருக்கும்ஒத்துப் போகும் வகையில் நதி நீர் ஆணையத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதில் மிக நியாயமான கோரிக்கைகளை ஜெயலலிதா முன் வைத்திருந்தார். நியாயத்தை எப்போதும் விரும்பாத கர்நாடகம் வழக்கம்போல்இதையும் எதிர்த்திருந்தது.
இது குறித்து கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கெளடா நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி ஆணையத்தின் செயல்பாட்டில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஜெயலலிதா கோருவது தேவையில்லாதது, சட்டவிரோதமானது (உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டு சட்ட விரோதம் குறித்து இவர் பேசுகிறார்).
அரசியல் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தையே கேள்விகேட்பது தவறானனது. (அப்ப, உச்ச நீதிமன்றத்தை மதிக்காதது!). உச்சநீதிமன்றம் சொன்ன வரையரைப்படி தான் ஆணையத்தின் விதிகள் எழுதப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றமே கூட காவிரி விஷயத்தில் ஆணையம் இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறிவிட்டது. முதலில் ஆணையத்தின் மூலம்எங்களை எதிர்த்தார். பின்னர் உச்ச நீதிமன்றம் மூலம்.. இப்போது பத்திரிக்கைகள் மூலம் ஜெயலலிதா எங்களை எதிர்க்கிறார் என்றார்கெளடா.
சட்ட அமைச்சராக இருந்து கொண்டே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீரை விட மாட்டோம் என்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டே பேட்டி தந்தவர் இந்த சந்திரே கெளடா.
இப்போது விதிகள், அரசியல் சட்டம், உச்ச நீதிமன்றம் என்று கர்நாடகம் மதிக்காத விஷயங்களைப் பற்றி தமிழகத்துக்குப் கிளாஸ்எடுக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications