ஆசிரியரின் சாவை வைத்து திமுக, அதிமுக மோதல்
சென்னை:
தேனி ஆசிரியர் அப்துல் சத்தார் தற்கொலை செய்து கொண்டதற்காக அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவிவழங்கியதில் அரசியல் எங்கே வந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது தேனி அப்துல் சத்தாரும், பொள்ளாச்சியில்காசிப் பண்டியன் என்ற தலைமை ஆசிரியரும் தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களது குடும்பத்துக்கு திமுக சார்பில் தலா ரூ. 50,000 நிதியுதவி தரப்பட்டது.
ஆனால், இதில் தேனி அப்துல் சத்தாரின் சாவை கொச்சைப்படுத்தி கல்வியமைச்சர் தம்பிதுரை உளறியிருந்தார்.
சத்தார் எய்ட்ஸ் நோய் காரணமாகவும், குடும்பத்தகராறு மற்றும் கடன் தொல்லை காரணமாகவும்தான் இறந்தார்என்றும், ஆனால், போராட்டத்திற்காக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி திமுக நிதியுதவி தந்துஇப்பிரச்சினையை அரசியலாக்கி விட்டது என்றும் தம்பித்துரை கூறியிருந்தார்.
இதற்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திமுக முரசொலி அறக்கட்டளை சார்பாகவும், திமுக அறக்கட்டளை சார்பாகவும், வெற்றிச் செல்வி அன்பழகன் கண்மருத்துவமனை மூலமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு பல லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இவையெல்லாம் அரசியல் நோக்கிலா வழங்கப்பட்டன?
உயிர் நீத்த ஆசிரியரின் குடும்பத்திற்கு உடனடியாக நிதியுதவி செய்ய வேண்டியபோது, அவருக்கு என்ன நோய்இருந்தது, அவரது குடும்பத்தில் என்ன பிரச்சனை இருந்தது என்பதையெல்லாம் ஆய்வு செய்யவா முடியும்?
இந்த நிதியுதவியில் எங்கிருந்து வந்தது அரசியல்?
இறந்தவருக்கு என்ன நோய் இருந்தது, எப்படி இறந்தார் என்பதையெல்லாமா ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார்கள்? அதை வேண்டுமானால் கல்வி அமைச்சரே தம்பிதுரையே செய்து கொள்ளட்டுமே என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
தம்பிதுரை சொன்னது:
முன்னதாக தம்பித்துரை விடுத்திருந்த அறிக்கையில்,
ஆசிரியர் சத்தாருக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவப்பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதுவும் அவரது தற்கொலைக்குக் காரணமாகஇருந்திருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு, தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரேநோக்கத்தில், இந்த விஷயத்தை அரசியலாக்கி இழிவான லாபம் சம்பாதிக்க நினைக்கிறது திமுக என்றுகூறியிருந்தார் தம்பித்துரை.












Click it and Unblock the Notifications