வைகோவைச் சந்தித்தார் கருணாநிதி: கட்டுத் தழுவி கண் கலங்கினர்
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை திமுக தலைவர் கருணாநிதி சிறையில் சென்று சந்தித்துப் பேசினார்.
நேற்று காலை 8.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட கருணாநிதி 11.35க்கு வேலூர் மத்திய சிறைக்குச் சென்றார். அவருடன்ஏராளமான திமுகவினரும் சிறைக்குச் சென்றனர்.
11.40க்கு கருணாநிதி மற்றும் மூத்த தலைவர்கள் மட்டும் சிறைக்குள் சென்றனர். கருணாநிதியைப் பார்த்தவுடன் வைகோ கண் கலங்கினார்.அதைப் பார்த்த கருணாநிதியும் அழுதுவிட்டார்.
வைகோவை கட்டித் தழுவிய கருணாநிதி அவருடன் தனியே சுமார் 45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். 12.25 மணிக்கு கருணாநிதிசிறையில் இருந்து வெளியே வந்தார். அங்கு பெரும் திரளாகக் கூடியிருந்த நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
வைகோ தெளிவாக, நலமாக, வைராக்கியமாகவே இருக்கிறார். நான் திமுக, மதிமுக இணைப்பு குறித்து ஏதும் பேசவில்லை. சொல்லப்போனால் அரசியல் கூட பேசவில்லை. நான் சங்கத் தமிழ் எழுதிய போது என் உடன், அருகிலேயே இருந்தவர் வைகோ. இப்போது நான்எழுதி வரும் தொல்காப்பியப் பூங்கா குறித்து வைகோ ஆர்வத்துடன் கேட்டார்.
இருவருமே இலக்கியம் தான் அதிகம் பேசினோம். குறளோவியம், சங்கத் தமிழ், தொல்காப்பியம் என்று தான் எங்கள் பேச்சுஅமைந்திருந்தது.
என் நலனையும் முரசொலி மாறனின் நலனையும் அதிக அக்கரை எடுத்து விசாரித்தார் தம்பி வைகோ. அரசியல் உறவை விட எங்ளுக்குள்இருந்த அண்ணன்- தம்பி உறவு தான் இந்தச் சந்திப்பின் முன் நின்றது என்றார் கருணாநிதி.
நீங்கள் கைதான போது வைகோ உங்களை விமர்சித்தாரே என்று நிருபர்கள் கேட்டபோது, நான் கைதானபோது என்னை வைகோவிமர்சித்ததாகக் கூறுவது தவறு. என் கைதின்போது என்னை சில மதிமுகவினர் விமர்சித்துப் பேசியிருக்கலாம். ஆனால், வைகோ அப்படிபேசவும் இல்லை, எழுதவும் இல்லை. எந்த இடத்திலும் என்னை வைகோ விமர்சிக்கவே இல்லை என்றார் கருணாநிதி.
திமுக, மதிமுக இணைப்புக்கு வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது,
இணைப்பு குறித்து நாங்கள் பேசவில்லை. ஆனால், எதிர்காலம், இணைப்புக்கான வாய்ப்பு ஆகியவை குறித்து நான் இப்போது எதுவும் கூறமுடியாது என்றார்.
வைகோவை நீங்கள் சந்திப்பதற்கு திமுகவில் அதிருப்தி எழுந்துள்ளதாமே என்று கேட்டபோது, அது சில பத்திரிக்கைகள் வெளியிடும்புருடாக்கள் என்றார்.
மக்கள் பிரச்சனைகளில் திமுக, காங்கிரஸ் இணைந்து செயல்பட்டு வருகின்றனவே, எதிர் காலத்தில் கூட்டணி வருமா என்ற கேள்விக்குபதிலளித்த கருணாநிதி, இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை நீங்கள் கூறியிருக்கிறீர்கள் என்றார் கருணாநிதி.
மத்திய அரசு மீது அதிருப்தி:
தொடர்ந்து பேசிய கருணாநிதி, பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால்தான் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இந்தசட்டத்தில் தளர்வு தேவைதான். நான் கைது செய்யப்பட்டபோதும், வைகோ கைது செய்யப்பட்டபோதும், மத்திய அரசு உரிய நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசின் போக்கு திருப்தியானதாக இல்லை என்றார் கருணாநிதி.
இதன் பின்னர் வேலூர் ஹோட்டல் ரிவிவ்யூவில் சிறிது நேரம் ஓய்வெடுத்த கருணாநிதி சென்னை திரும்பினார்.
மதிமுகவினர் மகிழ்ச்சி:
தங்களது தலைவர் வைகோவை திமுக தலைவர் கருணாநிதி நேரில் வந்து சந்தித்துப் பேசியது மாநிலம் முழுவதுமே மதிமுகவினரிடையேபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக- திமுக இணைப்பு வருமோ இல்லையே, இந்தச் சந்திப்பால் எதிர்காலத்தில் கூட்டணிநிச்சயம் என்று மதிமுகவினர் தெரிவித்தனர்.
கோர்ட்டில் வைகோ இன்று ஆஜர்:
இதற்கிடையே அதிமுகவினரைத் தாக்கியது தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன் பதிவான வழக்கில் மயிலாடுதுறைகோர்ட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ மீது, 1984ம் ஆண்டுமயிலாடுதுறையில் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் தாக்குதல்நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மிக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அந்த வழக்கு சமீபத்தில் தூசி தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டது. மயிலாடுதுறை கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக சிலமுறை வைகோ மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இன்று (புதன்கிழமை) வைகோ மீண்டும் இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications