மேட்டூர் அணைக்கு நீர் வருவது குறைந்தது
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.62 அடியாக உள்ளது. கர்நாடகம் நீரைத் திறந்துவிடுவதை நிறுத்தியதால்அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது.
கடந்த வாரத்தில் கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டதாலும், கன மழை காரணமாகவும் அணைக்கு வினாடிக்கு 40,000கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனன் அணையின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்தது.
ஆனால், நேற்று முன் தினம் முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்திவிட்டது. இதனால் அணைக்கு நீர்வருவது பெருமளவு குறைந்துவிட்டது.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 9,722 அடி நீர்மட்டுமே வந்து கொண்டுள்ளது. நேற்று 11,473 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், இன்று மழைஅவ்வளவாக இல்லாததால் நீர் வரத்து குறைந்துவிட்டது.
தற்போது அணையின் நீர்மட்டம் 66.62 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் மழை தொடர்ந்து வருவதால்அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுவிட்டது.
அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். இங்கு அதிக பட்சமாக 93.4 டி.எம்.சி. நீரை சேமிக்க முடியும்.இப்போது அணையில் உள்ள நீரின் அளவு 26.679 டி.எம்.சியாகும்.
தமிழகத்தில் தொடர்ந்து மழை:
இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தீபாவளி அன்றும் மழை கொட்டியது.இதனால் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்ட சோகத்தையும் மறந்து விவசாயிகளும், பொதுமக்களும்மழையை கண்டு ஆனந்தித்தனர்.
மயிலாடுதுறையில் அதிகபட்சம் 11 செமீ மழை பதிவானது. காரைக்கால், பாம்பன் ஆகிய பகுதிகளில் 2 செமீ மழைபதிவானது. சென்னையில் ஒரு செமீ மழை பெய்துள்ளது.
இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
