காஞ்சியில் புதிய ரயில் நிலையம் இன்று திறப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் ரூ.1.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஏ.கே. மூர்த்தி இன்று திறந்து வைக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உள்ள மீட்டர் கேஜ் பாதைகள் அனைத்தும் கடந்த 1999ம் ஆண்டு அகல ரயில்பாதைகளாக மாற்றப்பட்டன.
இருப்பினும் இந்த ரயில் நிலையத்தில் வசதிகள் குறைவாகவும், மின்சார ரயில்கள் வந்து செல்லும் வசதிஇல்லாமலும் இருந்து வந்தது. இதனால் பொன்னேரிக் கரை அருகே புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வேதுறை முடிவு செய்தது.
இந்தப் பணிகள் ரூ.1.30 கோடி செலவில் கடந்த ஆண்டு துவக்கப்பட்டன. பணிகள் மந்தமாக இருந்த நிலையில்மூர்த்தி அமைச்சரானவுடன் அவர் தன் வழக்கமான "வேலைகளை"க் காட்டினார். அதன் பிறகே பணிகள் வேகமாகநடந்தன.
இதனால் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே பணிகள் முடிந்து, தற்போது ரயில் நிலையம் தயாராகி விட்டது. இந்தரயில் நிலையத்தில் தானியங்கி முன்பதிவு வசதி உள்ளிட்ட அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய ரயில் நிலையம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. இன்று மாலை நடக்கும் இந்த விழாவில் ரயில் நிலையத்தைமூர்த்தி திறந்து வைக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார்களான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும்ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தமிழக போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
-->
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications