மாஜி அதிமுக அமைச்சர் திடீர் கைது: மக்கள் சாலை மறியல்
ஈரோடு:
முன்னாள் அதிமுக அமைச்சர் துரை ராமசாமி கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் சட்டசபைத் தொகுதியில் ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்துரை.ராமசாமி. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
வெள்ளக்கோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள கருமாரியம்மன் கோவில் நிர்வாகம்தொடர்பாக துரை ராமசாமிக்கும், அதிமுகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகதகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது.
இந்த நிலையில் கோவில் திருவிழா தொடர்பாக துரை ராமசாமிக்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பு வந்தது. இதையடுத்துவியாழக்கிழமை பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
ஆனால் துரை ராமசாமி உள்ளிட்டவர்களை கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று சக்திவேல் குழுவினர்மறித்ததாக தெரிகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் மூண்டது.
இதைத் தொடர்ந்து துரை ராமசாமியை போலீஸார் கைது செய்து காங்கேயம் கொண்டு சென்றனர். இதையடுத்துதுரை ராமசாமியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக துரை ராமசாமியை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications