போலீஸ் ஜீப் மீது புலிகள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

வல்வெட்டித்துறை:

விடுதலை புலிகள் இயக்ககத்தின் தற்கொலை படையைச் சேர்ந்த கரும்புலி இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸ்ஜீப்பின் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். இதில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். ஆனால், போலீசார் உயிர்தப்பிவிட்டனர்.

இலங்கையின் வல்வெட்டித்துறைக்கு 40 கி.மீ. தொலைவிலுள்ள பாலாசென்னி என்ற இடத்தில் வன்னாசிங்கே என்றபோலீஸ் உயர் அதிகாரி காவலர்கள் சிலருடன் போலீஸ் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். ஜீப்பை அவரே ஓட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது விடுதலை புலிகளின் தற்கொலை படை பிரிவை சேர்ந்த ஒருவர் ஜீப்பின் மீது பாய்ந்து தன் உடலில்கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்த 3 போலீசார் காயமடைந்தனர். வன்னா சிங்கே எந்த காயமுமின்றிஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வன்னாசிங்கே விடுதலை புலிகள் பலரையும் கைது செய்தவர். அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்ததாக்குதலை புலிகள் நடத்தியிருக்ககூடும் என்று கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடந்து வரும் கடும் சண்டையில் 16 புலிகளும், 2 ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று (வியாழக்கிழமை) வடகிழக்கு பகுதியில் போலீஸ் முகாம் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார்கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நார்வே அமைச்சரை சந்திக்கிறார் கதிர்காமர்

இந்நிலையில் இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்து இலங்கையின் வெளியுறவுத் துறைஅமைச்சர் லட்சுமண் கதிர்காமர்அடுத்த வாரம் நார்வேயின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சனைஅமெரிக்காவில் சந்தித்துப் பேச உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+