தமிழகம் முழுவதிலும் பி.எஸ்.என்.எல். தொலைபேசி எண்கள் மாற்றம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் தொலைபேசி எண்கள் மாற்றம் திட்டமிட்டபடி நடந்து வருவதாக பாரத் சஞ்சார் நிகாம்லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள தொலைபேசி எண்கள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு வருகிறது. 5 இலக்க எண்கள் 6இலக்கமாகவும், 6 இலக்க எண்கள் 7 இலக்க எண்களாகவும் மாற்றப்படுகின்றன. சென்னையில் 7 இலக்க எண்கள்அனைத்தும் 8 இலக்க எண்களாக மாற்றப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக தூத்துக்குடி, கடலூர், வேலூர் ஆகிய தொலைத் தொடர்பு மாவட்டங்களில் 6இலக்க எண்கள் 7 இலக்க எண்களாக மாற்றப்பட்டு விட்டன. கடந்த அக்டோபரில் இந்த மாற்றம் தொடங்கிதொடர்ந்து நடந்து வருகிறது.
அதேபோல, திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்டத்தில், நவம்பர் 9ம் தேதி இலக்க மாற்றம் நடைபெற்றது.நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் திருச்சி, மதுரை, கூடலூர், பாண்டிச்சேரி தொலைத் தொடர்புமாவட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் 8 இலக்க எண்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த மாற்றம் மூலம் தொலைபேசி சேவைஇன்னும் எளிதாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் இந்த எண்கள் மாற்றம் முழுமையாக முடிந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் சில தனியார் நிறுவனங்களும் தொலைபேசி சேவையில் ஈடுபட்டுவருவதால், அவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே பி.எஸ்.என்.எல். இந்த எண்கள்மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications