கரூர் எம்.பி. தொகுதி வாக்குகளை எண்ண உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:
கரூர் எம்.பி தொகுதி வாக்குகளை மறுபடியும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால்வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னச்சாமி வெற்றி பெற்றாது செல்லாது என்று அறிவிக்கக்கோரியும்,வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரியும் திமுக வேட்பாளர் பழனிச்சாமி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டுவந்தன.
இந்த நிலையில், வாக்குகள் மறுபடியும் எண்ணப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்சின்னச்சாமி மனு செய்தார்.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்குகளை எண்ணுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்துவாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
கடந்த புதன்கிழமை மறு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று முன்னதாகத் தான், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதால் இப்பணியை ஒத்திவைக்க வேண்டும் என்று சின்னசாமி சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால் அதை உடனடியாக நிராகரித்த உயர் நீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கஉத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து மறு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. கடைசியாக16,000 ஓட்டுக்கள் வரை எண்ணப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications