மத கலவர அபாயம்: வி.எச்.பியின் யாத்திரை தடுப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

சமீபத்தில் மதக் கலவரத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த குஜராத்தின் கோத்ரா நகருக்குள் மதவாத யாத்திரையை நடத்தமுயன்ற விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடிா தடுத்து நிறுத்தப்பட்டார்.

தேர்தல் நேரத்தில் அவரது யாத்திரை மதக் கலவரத்தைத் தூண்டும் என்பதால் இதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்தது.இதையடுத்து வேறு வழியில்லாமல் இந்த யாத்திரைக்கு குஜராத் பா.ஜ.க. அரசு தடை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், இந்தத் தடைகளை மீறி தொகாடியா தனது யாத்திரையை நடத்தினார். இதை குஜராத் முதல்வர் நரேந்திர மோடிஅனுமதித்தார்.

இந்த யாத்திரை நகரின் வெளியே கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கியது. கோத்ரா நகருக்குள் நுழையும்போது அதைத்தடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தொகாடியா தடுக்கப்பட்டார்.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய தொகாடியா, யாத்திரையைத் தடுக்க தேர்தல் கமிஷனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.நாங்கள் எங்கள் யாத்திரையை எப்படியாவது நடத்துவோம் என்றார்.

இந்த யாத்திரையால் கோத்ராவிலும் குஜராத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் பெரும் பதற்றம் நிலவியது. ஆனால்,ஏதாவது வன்முறை நடந்தால் தேர்தலை கமிஷன் ஒத்தி வைத்துவிடும் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பை நரேந்திர மோடிஅரசு பலப்படுத்தியிருந்தது.

மோடியை நம்பாத தேர்தல் கமிஷன் மத்தியப் படைகளையும் பாதுகாப்பில் ஈடுபட உத்தரவிட்டிருந்தது.

கருணாநிதியின் அறியாமை.. வி.எச்.பி. கண்டனம்

இதற்கிடையே இந்து என்று ஒரு மதமே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது அவரது அறியாமையைக்காட்டுகிறது என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தமிழக துணைத் தலைவர் மணியன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், காஞ்சிப் பெரியவர் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவற்றை திரித்துக் கூறி இந்து மதத்தினரைப்புண்படுத்தியுள்ளார் கருணாநிதி.

காஞ்சிப் பெரியவர் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில், இந்து மதம்தான் உலகில் முதலாவதாக தோன்றிய மதம், மற்றமதங்கள் எல்லாம் அதன் பிறகு வந்தவைதான். முதலில் பெயர் இல்லாத மதமாக இந்து மதம் இருந்தது என்று கூறியுள்ளார்.ஆனால் இவற்றை வசதியாக மறந்து விட்டு தனக்குத் தோன்றிய கருத்தைக் கூறி காஞ்சிப் பெரியவருக்கும் இழுக்குத் தேடித்தந்துள்ளார் கருணாநிதி.

இந்து மதம் குறித்து இவர் பத்து பேருக்குக் கூறி, அந்தப் பத்து பேர் ஆயிரம் பேருக்குக் கூறி, அவர்கள் மூலம் உலகம் ழுவதிலும்இந்து மதம் குறித்துத் தெரிய வரும் என்று கருணாநிதி கூறியிருப்பது, ஏதோ இவரால்தான் இந்து மதம் குறித்து உலகுக்கே தெரியப்போகிறது என்பது போல இருக்கிறது.

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பரவி விட்ட இந்து மதம் குறித்து கருணாநிதி இப்படிப் பேசுவதுஅவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.

சீர்திருத்தத் திருமணம் கொண்டவர்களில் 99 சதவீதம் பேரின் குழந்தைகளுக்கு வைதீக முறைப்படிதான் இன்று திருமணம் நடந்துகொண்டிருக்கின்றன. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். இது கருணாநிதிக்கும் தெரியும்.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி வரும் கருணாநிதி, தனது விதண்டாவாதப் பேச்சின் மூலம் இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார். அவரை இந்துக்கள் சரியான றையில் தண்டிப்பார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+