மாறன் உடல் நிலையில் முன்னேற்றம்: கருணாநிதி தகவல்
சென்னை:
அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மாமாவும் திமுக தலைவருமான கருணாநிதிகூறினார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாறன் மேல் சிகிச்சைக்காக சிறப்பு "ஏர்ஆம்புலன்ஸ்" விமானம் மூலம் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ஹூஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற "மெதடிஸ்ட்" மருத்துவமனையில் மாறன் சேர்க்கப்பட்டார்.
மாறனுடைய மனைவி மல்லிகா, மகன் கலாநிதி மாறன், மருமகள் காவேரி மற்றும் கருணாநிதியின் மகள் செல்விஆகியோர் பின்னர் தனியாக அமெரிக்கா சென்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
மாறனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஹூஸ்டனில் இருந்து வரும் தகவல்கள்தெரிவிக்கின்றன.
ஆனாலும் அவர் முழுமையாகக் குணமடைவதற்கு இன்னும் நிறைய நாட்களாகும் என்று தெரிகிறது.
எப்படி இருந்தாலும் டிசம்பர் மாதம் வரை அவர் அமெரிக்க மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சைபெறுவார் என்று கூறினார் கருணாநிதி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications