வடகிழக்கு இலங்கை சீரமைப்பு: புலிகள்- அரசு நேரடி பேச்சு
கொழும்பு:
நாட்டின் வடகிழக்குப் பகுதியை சீரமைப்பது குறித்தும் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் இப் பகுதியில் குடியமர்த்துவது குறித்தும்விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நேரடி பேச்சுவார்த்தை இன்றுதொடங்கியது.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஜப்பான் மற்றும் நார்வே நாட்டு அதிகாரிகளும்பங்கேற்றனர். நார்வேயில் வரும் 25ம் தேதி இலங்கைக்கு நிதியுதவி செய்யவுள்ள நாடுகளின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் இந்தக்கூட்டம் நடந்துள்ளது.
வடகிழக்கில் வீடுகள் கட்டவும், சாலைகள் அமைக்கவும், கழிவுநீர் வடிகால் அமைக்கவும் இலங்கை அரசு உதவி கோரியது.
தாய்லாந்தில் நடந்த இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட புலிகள், இலங்கை அரசின் கூட்டுக் குழுஇந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.
அரசுத் தரப்பிலான குழுவுக்கு தலைமை வகித்த பெர்னார்ட் குணதிலகே கூறுகையில், 25ம் தேதி நடக்கும் சர்வதேச உதவி நாடுகளின்கூட்டத்தில் என்ன வகையான கோரிக்கை என்பது குறித்து முடிவு செய்யவே இன்று கூடினோம். மேலும் தமிழ்ப் பெண்களுக்கு உரியவசதிகள் செய்து தரவும் தமிழ்க் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்ந்து பயிலவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துவிவாதித்தோம்.
வட கிழக்கு இலங்கையை சீரமைக்க ரூ. 2,500 கோடி தேவைப்படும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் திரட்ட முடிவுசெய்துள்ளோம் என்றார்.
நிதியுதவி செய்யும் நாடுகள் கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்பட 10 நாடுகள் பங்கேற்கஉள்ளன.
சந்திரிகாவுக்கு தமிழர் முன்னணி கோரிக்கை:
இதற்கிடையே புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு தருமாறு அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவுக்கு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டி.யூ.எல்.எப்.) கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் புலிகளுக்கு ஆதரவான 4 கட்சிகள் கூட்டணியைத் தலைமை தாங்கி நடத்தி வருகிறது முன்னணி. நேற்று கொழும்பில்நடந்த இந்த முன்னணியின் மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் அமைதிப் பேச்சு குறித்து முழு அளவில் விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 3 ஆண்டுகளுக்கு முன் நார்வேயைக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தையைஆரம்பித்து வைத்ததே சந்திரிகா குமாரதுங்கா தான். இப்போது இந்த பேச்சுவார்த்தையை எதிர்ப்பது கவலை தருகிறது. எனவே, அவரும்அவரது மக்கள் கூட்டணியும் பேச்சுவார்த்தைகளை ஆதரிக்க வேண்டும்.
சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிதாக்குவது, தேவையில்லாத முட்டுக் கட்டைகளைப் போடுவது போன்ற செயல்களை எல்லோரும்(சந்திரிகா) கைவிட வேண்டும். லட்சுமண் கதிர்காமர் போன்ற தமிழர்களின் தவறான பேச்சுக்கள் நிச்சயம் நல்லது விளைவிக்காது. இவர்கள்தமிழர்களின் மனித உரிமையை எப்போதும் மதித்தது இல்லை. இவரைப் போன்றவர்கள் பேச்சுவார்த்தையைக் குறை கூற எந்தத் தகுதியும்இல்லை.
இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் நார்வே நாடு காட்டி வரும் ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது. மிக நடுநிலையாக செயல்பட்டு வருகிறதுநார்வே.
இனப் பிரச்சனை தொடங்கிய காலத்தில் இருந்து போர் ஓய்வு இவ்வளவு நாள் நீடித்தது இல்லை. கிட்டத்தட்ட 9 மாதங்களாக புலிகளும்ராணுவமும் அமைதியைக் கடைபிடித்து வருகின்றனர். பரஸ்பர நம்பிக்கையும் அமைதி முயற்சிக்கு கிடைத்துள்ள சர்வதேச ஆதரவும் தான்இதற்குக் காரணம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications